புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


மட்டக்களப்பு சிறுவர் நாடகம் தேசிய ரீதியில் 10 விருதுகள் பெற்று சாதனை! ( செய்தித் துளிகள்)
மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் “பிறந்தநாள் கொண்டாட்டம்” எனும் சிறுவர் நாடகம் ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருது அடங்கலாக பத்து விருதுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.
அரச சிறுவர் நாடக விழா கொழும்பு ஜோன் டி சில்வா அரங்கில், கலாசார மற்றும் கலை
அலுவல்கள் அமைச்கர் ரி.பி ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பில் இருந்து நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் “பிறந்தநாள் கொண்டாட்டம்” எனும் சிறுவர் நாடகம் பங்கு பற்றி இருந்தது. இந்நாடகத்தை து.காஞ்சனா என்பவர் எழுதி நெறிப்படுத்தி இருந்தார். இச் சிறுவர் நாடகம் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டதோடு, ஒன்பது தேசிய விருதுகளையும், ஒரு சிறப்பு விருதையும் பெற்றுக் கொண்டது.
சிறந்த நெறியாளருக்கான விருதும் சிறந்த பிரதிக்கான விருதும் து.காஞ்சனாவுக்கு கிடைத்தது. சிறந்த நடிகருக்கான விருது கோ.ஜயசீலன் அவர்களுக்கும், சிறந்த நடிகைக்கான விருது செ.நிசாந்தினி அவர்களுக்கும் கிடைத்தது.
துணை நடிகைக்கான விருது ச.லோசனா அவர்களுக்குக் கிடைத்தது. ஓப்பனைக்கான விருது செ.நிசாந்தினி அவர்களுக்கும், உடையமைப்புக்கான விருது ஞா.பிரனுஜா அவர்களுக்கும் கிடைத்தது.
காட்சியமைப்பிற்கான விருது அ.விமல்ராஜ் அவர்களுக்கும், பி.ஜே. அலெக்ஸ் அவர்களுக்கும் கிடைத்தது. மேடை முகாமைத்துவத்திற்கான விருதும் பி.ஜே அலெக்ஸ் அவர்களுக்குக் கிடைத்தது. இசைக்கான சிறப்பு விருது ஒன்றும் மோ.பிரசன்னா அவர்களுக்குக் கிடைத்தது.
கடந்த வருடம் நெய்தல் ஊடக தரிசனம் தயாரிப்பில் இரண்டு நாடகங்கள் பங்கு பற்றி இருந்தன. அவற்றுக்கு மொத்தமாக ஏழு விருதுகள் கிடைத்திருந்தது. இம்முறை ஒரு நாடகம் மூலம் பத்து விருதுகள் பெற்றுக் கொண்டமை மிகவும் சிறப்பான விடயமாகும்.
இச்சிறுவர் நாடகச் செயற்பாட்டில் ஈடுபட்ட கலைஞர்கள் அனைவரும் கிழக்குப் பல்கலைக்கழக, சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக நாடகத்துறை மாணவர்கள் என்பது மிக முக்கியமானது. இது இந்நிறுவகத்திற்கும், இந்நிறுவக நாடகத்துறைக்கும் பெருமையும், புகழும் சேர்கின்ற விடயமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சாதிக்க துடிக்கும் எமது நெஞ்சங்களுக்கு புலம்பெயர் மக்கள் கைகொடுத்து எமது இளம் சமூகத்தில் புதைந்துகிடக்கும் திறமைகளை சர்வதேசமெங்கும் ஒலிக்கச்செய்யமுன்வரவேண்டும்.
செங்கலடி மட்.விவேகானந்தா வித்தியாலயத்தில் வறுமையான எட்டு மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!
மட்டக்களப்பு செங்கலடி கணபதிப்பிள்ளை கிராமத்தில் அமைந்துள்ள மட். விவேகானந்தா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் வறுமையான எட்டு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
செங்கலடியில் பின்தங்கிய பகுதிகளான ஐயன்கேணி, தளவாய், கணபதிப்பிள்ளை கிராமங்களைச் சேர்ந்த வறுமையான மாணவர்கள் கல்வி பயிலும் மட்.விவேகானந்தா வித்தியாலயத்தில் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் எட்டுப்பேர் சித்தியடைந்துள்ளனர்.
கடந்த காலங்களில் கல்வியில் பின்தங்கிய நிலையில் இருந்த இப்பாடசாலை அதிபர், ஆசிரியர்களினதும், கிராம அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களினதும், உதவியுடன் மேற்படி எட்டுமாணவர்களை சித்தியடைய வைத்ததாகக பாடசாலையின் அதிபர் திரு.குணசீலன் தெரிவித்தார்.
குறிப்பாக இம்மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த ஆசிரியர் அமல் அவர்களின் கடுமையான முயச்சியின் மூலம் இம்முறை எட்டு மாணவர்களை சித்தியடையச் செய்யமுடிந்துள்ளது எனவும் அவர் கூறினார்.
செல்வன் மு.கிரிஷாந்- 176 புள்ளிகள், செல்வி சி.யோபிகா- 167 புள்ளிகள், செல்வி கே.ஜென்ஷி- 160 புள்ளிகள், செல்வன் ஜீ.பிரதீபன்- 158 புள்ளிகள், செல்வன் ர.ரிஜிவன்- 157 புள்ளிகள், செல்வி ந.ஜனுசிகா -156 புள்ளிகள், செல்வன் கு. லுக்ஷாந்- 151 புள்ளிகள், செல்வி ச.கிருஷ்ணிகா-147 புள்ளிகள் ஆகிய மாணவர்களே புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாவர்.

ad

ad