புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 அக்., 2012


கடுமையான வாய்த்தர்க்கத்தோடு நடைபெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் - நடந்தது என்ன?
தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த கூட்டத்தில்,இராணுவத்தினர் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமிப்பது குறித்து கூட்டமைப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு, ஆளுநர் அதிகாரத் தொனியிலும், அமைச்சர், அதிகாரிகள் மழுப்பல் பாணியிலும் பதிலளிக்க கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர்.
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  நேற்று முன் தினம்  மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதனால் கூட்டத்தில் ஒரே களேபரமாக இருந்தது. மேலும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை எள்ளி நகையாடும் விதத்தில் சந்திரகுமாரும், டக்ளசும் பேசிக்கொண்டிருந்தனர். அதற்கும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் விட்டுக்கொடுக்கவில்லை.
அமைச்சரே என விளித்த சுமந்தரனைப் பார்த்து கெளரவ அமைச்சரே என டக்ளஸை விளிக்குமாறு கட்டளை இட்டார் சந்திரகுமார்.
இந்நிலையில் கூட்டம் முழுமையான முறையில் இடம்பெறாமல், ஒரு பகுதியை மட்டும் நடத்திவிட்டு, அடுத்த பகுதியை நவம்பர் மாதம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ad

ad