புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2012

மாதகல் மேற்கு கிராம வாசிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு
2009 ஆம் ஆண்டு ஆயுத மோதல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும் தாம் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேற முடியாது தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாக இடம்பெயர் மாதகல்
மேற்கு கிராம வாசிகள் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.


யாழ். மாவட்டத்திலுள்ள மாதகல் மேற்கு கிராம வாசிகள் சட்டத்தரணி மோஹன் பாலேந்திரா ஊடாக தாக்கல் செய்துள்ள தமது மனுவில் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மஹிந்த ஹத்துருசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக குறிப்பிட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போதிலும் தாம் தமது சொந்த வீடுகளில் மீள்குடியேறுவதும் அங்கு செல்வதும் தொடர்ந்தும் தடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தமது மனுவில் முறையிட்டுள்ளனர்.


தம்மை அனுமதிப்பதற்குப் பதிலாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தமது கிராமத்தை உள்ளடக்கிய வலிகாமம் பிரதேசத்தைச் சூழ தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மனுவில் கவலை தெரிவித்துள்ளனர்.

ad

ad