புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2012

கொல்கத்தாவை 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது ஆக்லாந்துசாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது ஆக்லாந்து அணி.
நேற்றைய போட்டியில் முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணி 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்று வெற்றி
பெற்றது.

கேப்டவுனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆக்லாந்து அணி வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் ஓட்டங்களை சேகரிக்கத் தடுமாறினர். இதனால் கம்பீர் விக்கெட்டை அந்த அணி முதலிலேயே இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 40, பிஸ்லா 38 ஓட்டங்களை எடுத்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் சேர்த்தது. யூசுப் பதான் 22, பட்டியா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆக்லாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மக்மூத் 4 ஓவர்கள் வீசி 16 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 முக்கியமான விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பின்னர் 138 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆக்லாந்து அணியில் குப்டில் 25, வின்சென்ட் 30 ஓட்டங்களுடன் வெளியேறினர். 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ஓட்டங்களை எடுத்திருந்தது. பந்து வீச்சில் அசத்திய மக்மூத் துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டார். அவ்வப்போது சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுக்கு பந்துகளை பறக்கடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மக்மூத் பவுண்டரி அடித்து அரைசதமடிக்க, அணியும் 139 ஓட்ட இலக்கை அடைந்து எளிதாக வெற்றி பெற்றது.

மக்மூத் 42 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களை பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி தரப்பில் சுனில் நரேயன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் அசத்திய மக்மூத் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ad

ad