புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2012


படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் முறுகல்நிலை!
முள்ளிவாய்க்கால் பகுதியில் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் நேற்றுக்காலை முறுகல்நிலை ஏற்பட்டதாகவும் இதன்போது பொது மக்கள் பலர் சிறுகாயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகிறது.
இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் தகவல் தெரிவிக்கையில்,
இறுதிப்போரின் போது தாம் கைவிட்டு வந்த பொருள்களை மீட்க கடந்த மூன்று தினங்களாக படையினர் அனுமதி வழங்கியிருந்தனர். இந்நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தமது உடைமைகளை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்றுக்காலை 8 மணியளவில் இவ்வாறு தமது பொருள்களை எடுத்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே இடையே முறுகல் நிலை ஏற்றப்பட்டது.
இந்த முறுகல் நிலை முற்றவே, தாம் கொண்டுவந்த தடிகள், பொல்லுகள் என்பவற்றால் எம்மைப் படையினர் விரட்டிவிரட்டி தாக்கினர். இதனால் நாங்கள் சிதறி ஓடினோம். எனினும் அவ்வாறு ஓடியவர்களில் இருவரை பிடித்த இராணுவம் அவர்களை கட்டி வைத்து கண்மூடித்தனமாகத் தாக்கியது.
"ஐயோ! எங்களை கட்டி வைத்து அடிக்கிறாங்கள். யாராவது வந்து காப்பாற்றுங்கள்'' என்று அந்த இருவரும் பெரும் குரலில் ஓலமிட்டனர். இதனைத் தொடர்ந்து கையில் அகப்பட்ட தடிகளுடன் விரைந்து சென்ற பொதுமக்கள் படையினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர்.
இதன்போது இருதரப்புக்கும் இடையே பெரும் கைகலப்புத் தோன்றியது. இறுதியில் பொதுமக்களின் அடி தாங்க முடியாமல் படையினர் ஓடிவிட்டனர். பின்னர் நாங்கள் படையினரால் கட்டி வைக்கப்பட்டிருந்த இருவரையும் மீட்டு வந்தோம். இந்தச் சம்பவத்துக்கு பின்னர் குறித்த பகுதியில் பொது மக்கள் சென்று தம் உடைமைகளை எடுத்துவர படையினர் அனுமதி மறுத்துள்ளனர் என்றார்.
எனினும் இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன தரப்புகளிடமிருந்து உறுதியான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad