புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2012


எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் - நீரில் மூழ்கியது காலி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருந்த குறைந்த தாழமுக்கமானது தற்போது வலுவடைந்து தாழமுக்கமாக மாறியுள்ளதாக திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய வானிலையை அடுத்து காலி நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காலி சங்கமித்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீதி நீரில் மூழ்கியுள்ளமையினால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபில தெரிவித்துள்ளார்.
கராபிட்டி பகுதியின் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
எச்சரிக்கை! வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்
யாழ். கிழக்கு கடற்பரப்பில் 600 கடல் மைல் தொலைவில் வங்காள விரிகுடாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திடீர் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தினால் காற்றின் வேகம் அதிகரித்திருக்மென்றும் கடல் அலைகளின் வேகம் அதிகரித்திருக்குமென்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும் அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  அத்துடன், மேற்குறிப்பிட்ட 3 மாகாணங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

ad

ad