புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 அக்., 2012


வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி உறுப்பினர்களின் செயற்பாடுகளைத் தடுக்க அரசாங்கம் முயற்சி: கோத்தபாய
இலங்கையிலிருந்து தப்பிச் சென்று வெளிநாடுகளில் செயற்படும் சில விடுதலைப் புலி உறுப்பினர்களின் சட்டவிரோதமான செயற்பாடுகளை தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நடைபெற்ற இளம் தலைவர்கள் சங்கத்தின் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற போது புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். சில உறுப்பினர்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
தப்பிச் சென்ற விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களே நிதி திரட்டல், பிரசார நடவடிக்கைகள் உள்ளிட்ட சட்டவிரோதமான செயற்பாடுகளில் செயற்பட்டு வருகின்றனர்.
2005ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயற்சித்தார். இதன்பிரகாரம் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன.
இருப்பினும், புலிகள் இயக்கத்தினர் யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறி மக்கள் மீது கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டனர்.
எனினும், மனிதாபிமான நடவடிக்கையினை வெற்றிகரமாக முன்னெடுத்த அரசாங்கம், இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்களின் நலன்புரி விடயத்தில் கவனத்தைச் செலுத்தி அவர்களை மீள்குடியேற்றம் செய்துள்ளது.
அத்துடன், ஐயாயிரம் சதுர கிலோமீற்றர் பரப்பளவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளையும் அகற்றியுள்ளது. புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.
பலமான தலைமைத்துவம், மக்களின் ஆதரவு, சிறந்த திட்டமிடல், தெளிவான திட்டம் உயர்தர தொழில் தகைமைகளைக் கொண்ட படை அதிகாரிகள் வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட பயிற்சி மற்றும் அனுபவத்தின் மூலமாகவே இந்த மனிதாபிமான நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுக்க முடிந்தது.
இந்நிலையில், புலம்பெயர் தமிழர்கள் முறைகேடான நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மனிதக் கடத்தல்களை மேற்கொண்டு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருகின்றது என குறிப்பிட்டா

ad

ad