இந்தியன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம்: ஜெர்மனி வீரர் செபஸ்டியன் வெட்டெல் வெற்றி
டெல்லி கிரேட்டர் நொய்டாவில் பார்முலா ஒன் கிரேண்ட் பிரிக்ஸ் கார் பந்தயம் நடந்தது. ஆட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை ரெட்புல் டீமை சேர்ந்த செபஸ்டியன்
வெட்டெல் எந்த இடைஞ்சலையும் சந்திக்காமல் 25 புள்ளிகள் பெற்று முதலாவதாக வந்து வெற்றி பெற்றார். ஜெர்மன் நாட்டை சேர்ந்தவரான செபஸ்டியன் வெட்டெலுக்கு இது 4வது வெற்றியாகும். இந்தியாவில் நடந்த கார் பந்தயத்தில் இது இரண்டாவது வெற்றியாகும்.

பெர்ராரி டீமை சேர்ந்தவரான பெர்னாண்டோ அலோன்சா இரண்டாவது வந்தார். செபஸ்டியன் வெட்டெலின் ரெட்புல் டீமை சேர்ந்த மார்க் வெப்பர் மூன்றாவதாக வந்தார்.
இந்தியாவின் கார் பந்தய வீரரான தமிழகத்தை சேர்ந்த நரைன் கார்த்திகேயன் ப்ரேக் பிரச்சினை காரணமாக 21வது இடத்திற்கு வந்தார்.