புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2012

‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் ஜெயலலிதாஎச்சரித்துள்ளார்.,’’ 
 ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே
வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா
தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொல்கிறதா? இந்தியா தலையிடாது. தமிழர்கள் மலேஷியாவில் அடிவாங்குகிறார்களா? பரவாயில்லை, இந்தியா  அதிலும் தலையிடாது. தமிழக ஆட்சியாளர்களை பிற நாட்டினர் விமர்சிக்கிறார்களா? அதைப்பற்றியும் இந்தியாவுக்குக் கவலையில்லை. 

இப்போது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு விமர்சிப்பதையும் இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கிறது. உண்மையிலேயே,  தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம்தானா என்ற சந்தேகத்தை தமிழர்கள் மீண்டும் ஒருமுறை தங்களுக்குள் கேட்டுக் கொள்கிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சி ஆவணங்களை வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

உலக நாடுகள் இலங்கை அரசைக் கண்டித்த போதும், பக்கத்து நாடான இந்தியா சேனல் 4 ஆவணங்களைக் கண்டுகொள்ளவில்லை. அதே நேரத்தில் இலங்கை அரசைக்  காப்பாற்றும் வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டது.  

ஆனால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார். அதில்,  ‘‘இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும். தமிழர்கள் மீள்குடியமர்த்தப்படும் வரை இலங்கை மீது இந்தியா பொருளாதாரத் தடை  விதிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தினார்.

இந்தியா தனக்கு ஆதரவு தரும்போது, இந்தியாவில் ஒரு மாநிலமான தமிழ்நாடு தனக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது இலங்கை அரசுக்கு எரிச்சலைக் கிளப்பியது.  அதைத்தான் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே தனது பேட்டியில் வெளிப்படுத்தி இருந்தார். 

ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கோத்தபய, ‘‘ஜெயலலிதா தனது அரசியல் ஆதாயத்துக்காக இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில்  நிறைவேற்றியிருக்கிறார். அவர் ஏதாவது செய்ய நினைத்தால் கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தடுத்து நிறுத்தட்டும். அதை விடுத்து போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் அவர் பேச வேண்டாம்’’ என்று கோபமாகப் பேசியிருந்தார். கூடவே தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ‘அர்த்தமற்ற  தீர்மானங்கள்’ என்றும் கிண்டல் செய்திருந்தார். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை ஒரு நாடு கேலி செய்வதோ, விமர்சிப்பதோ கண்டனத்துக்குரியது என தமிழகத் தலைவர்கள் கொந்தளித் துப் போனார்கள். ஆனால், கோத்தபய ராஜபக்ஷேவின் பேட்டி வெளியாகி ஒருவாரம் கடந்த நிலையிலும், மத்திய அரசு சிறு கண்டனத்தைக் கூட தெரிவிக்கவில்லை.   

சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றமே கருத்துத் தெரிவிக்கத் தயங்கும் நிலையில், இன்னொரு நாடு அதைக் கேலி செய்வதை இந்தியா எப்படி அனுமதிக்கலாம்? என் றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கும் விடை, ராஜபக்ஷேவின் பேட்டியிலேயே இருக்கிறது.  இனப்படுகொலை தொடர்பான கேள்வி ஒன்றுக்கு, ‘‘இந்திய அரசு  எங்களுக்கு எல்லாமாக இருந்து உதவி செய்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார் கோத்தபய. 

இந்திய அரசு இறையாண்மையுள்ள ஒரு நாடு. அந்நாட்டில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தை கேள்வி கேட்பது இந்திய  இறையாண்மையைக் கேள்வி கேட்பதுபோல் ஆகாதா? என்று கொந்தளிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.

மத்திய அரசின் அமைதியை கேள்வி கேட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, கோத்தபய ராஜபக்ஷேவுக்கு தன்னுடைய பதிலை அழுத்தமாகவே தெரிவித்துள்ளார். ‘‘எல்லை  தாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களைத் தடுத்து நிறுத்துமாறு கோத்தபய எனக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கச்சத்தீவு பகுதிகளில் வலைகளை உலர்த்திக் கொள்ளலாம்,  சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம் என்கிற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை அவருக்கு நினைவுபடுத்துகிறேன்’’ என்று கோபமாக பதிலளித்துள்ள அவர்,  ‘‘சாத்தான் வேதம் ஓத வேண்டாம்’’ என்றும் எச்சரித்துள்ளார்.

‘‘சட்டமன்றத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததுதான், கோத்தபய இப்படி ஒரு துணிச்சலான பேட்டியை அளிக்கக் காரணமாகி விட்டது’’ என்ற ம த்திய அரசு மீதான தன் கோபத்தையும் காட்டமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயலலிதா. தமிழ்நாட்டுக் குரல் இந்திய அரசுக்கு ஒருபோதும் கேட்காது என்ற உண்மை  இன்னுமா இலங்கைக்குத் தெரியாமல் போய்விடும் என்பதுதான் தமிழர்களின் ஆதங்கமாகவும் இருக்கிறது.

‘‘தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் இலங்கை அரசுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையே கோத்தபய ராஜபக்ஷேவின் பேச்சு காட்டுகிறது’’ என்று கூறுகிறார் சீமான்.  ‘‘தமிழக சட்டமன்றத் தீர்மானங்களால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை  என்று கோத்தபய கூறியிருக்கிறார். இந்தத் தீர்மானத்தின் விளைவாகத்தான் இலங்கை மீது  பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இலங்கை போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை  பாதுகாப்புச் செயலராக இருப்பதோடு, அமெரிக்க பிரஜையாகவும் இருக்கும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு இதெல்லாம் நன்றாகவே தெரியும். ஆனாலும் மறைக்கப்  பார்க்கிறார்’’ என்று சொன்னார் சீமான்.

‘‘இலங்கைக்கு மத்திய அரசு சிறு எதிர்ப்புகூட தெரிவிக்கவில்லையே?’’ என்ற கேள்விக்கு, ‘‘கோத்தபய பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.  பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் நாடுகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தமிழக சட்டமன்றத்  தீர்மானத்தை இலங்கை விமர்சித்த போதும் இந்தியா அமைதியாக இருப்பதற்கு இதுதான் காரணம்’’ என்கிறார் சீமான்.

‘‘டெல்லியில் இருக்கும் இலங்கைத் தூதரை அழைத்து தன்னுடைய கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்’’ என்றும் பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் முதல்வர்  ஜெயலலிதா. அதுதான் ஒட்டுமொத்த தமிழர்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது. 

தமிழர்களுக்கும் நான்தான் பிரதமர், தமிழ்நாடும் இந்தியாவில்தான் இருக்கிறது என்பதை பிரதமர் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்துவாரா?
kumutham reporter

ad

ad