புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 அக்., 2012


விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் எயார் விமானம் உரிய அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் மீட்டெடுக்கப்படும் என கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இரணதீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் குறித்த விமானம் மூழ்கியுள்ளது. 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் திகதி பலாலி ரத்மலான நோக்கிப் பயணித்த லயன் எயார் என்டனோவ் விமானத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.
இந்த விமானத்தில் பயணித்த 50 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய கடற்படைச் சுழியோடிகள் விமான இடிபாடுகளை கண்டு பிடித்துள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து உரிய அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இடிபாடுகளை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

ad

ad