புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2012


ஜெயலலிதாவுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் ரத்து

தமிழ்நாட்டில் 2001-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தபோது, பொய்யான தகவல்களை அளித்ததாகக் கூறி அவர் மீது தேர்தல்
ஆணையம் பதிவு செய்த இரண்டு கிரிமினல் வழக்குகளை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்துவிட்டது.
புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தொகுதி தேர்தல் அதிகாரிகள் அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் சி. குப்புசாமியின் மனுவை ஆய்வு செய்து, நான்கு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்நசீதிமன்றம் உத்தரவிட்டது.

புவனகிரி மற்றும் புதுக்கோட்டை தேர்தல் அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கைகளில், கிருஷ்ணகிரி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளிலும் தான் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பதை ஜெயலலிதா மறைக்கவில்லை என்றும், அதனால் பொய்யான தகவலை அளித்தார் என்ற கேள்வி எழவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

நான்கு தொகுதிகளில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்தாலும், டான்சி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையில், அனைத்து மனுக்களுமே தள்ளுபடி செய்யப்பட்டன.

தேர்தலில் போட்டியிடுவோர், அதிகபட்சமாக இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடியும். ஆனால், ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தது தொடர்பான புகார் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், முன்னாள் திமுக எம்.பி. குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதனடிப்படையில், ஜெயலலிதா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, அடுத்த மாதே உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார். அதையடுத்து, ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் அப்போது இடைக்காலத் தடை விதித்தது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.

ad

ad