புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2012

துகிரி சுப்பாராவ் சாஸ்திரி பாலகிருஷ்ணன்- இவர்தான் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ-சசி வகையறாக்களுக்கு எதிராக நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் புதிய நீதிபதி. சுருக்கமாக, எம்.எஸ்.பாலகிருஷ்ணன். 

கடந்த 16-ந் தேதி நீதிபதி சோமராஜூ தனது இருக்கையில் அமர்ந்திருக்க, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களான அசோகன், பன்னீர்செல்வம் மற்றும் ஓர் ஆடிட்டர்

ஆகியோர் சசிகலா கோரியிருந்த- வழக்கில் சேர்க்கப்படாத ஆவணங்களை சுப்ரீம்  கோர்ட் உத்தரவுப்படி பார்த்துக்கொண்டிருந்தார்கள். புதிய பொறுப்பேற்க கோர்ட்டுக்குள் வந்தார் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணன். அவரிடம் வழக்கு சம்பந்தமான ஆவணங்களைக் கொடுத்து, பொறுப்பை ஏற்றுக்கொள்ளச் செய்தார் இந்த வழக்கின் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப் பட்டிருந்த சோமராஜூ.

புதிய நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணன் என்ன சொல்லப் போகிறார் என்று கோர்ட் ஹாலே எதிர்பார்த்திருந்தது. ஆவணங்களைப் புரட்டிக் கொண்டிருந்த வக்கீல்களும் ஆடிட்டரும் அந்த வேலையைக் கொஞ்சம் ஓரங்கட்டி வைத்துவிட்டு, நீதிபதியின் முகத்தையே பார்த்தபடி இருந்தனர். நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணன், ""எனக்கு இன்னும் 10 மாதம்தான் சர்வீஸ் இருக்கிறது. இந்த நேரத்தில், இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சர்ச்சைகளெல்லாம் எனக்குத் தெரியும்.  நான் அமைதியான முறையில் பணி ஓய்வு பெற விரும்புகிறேன்'' என்றார். அவருடைய பேச்சின் கடைசி வரி, ஜெ-சசி தரப்பு வழக்கறிஞர்களின் முகத்தில் பிரகாசத்தைக் கொடுத்தது.

அமைதியான ஓய்வை நீதிபதி விரும்புவதால், சர்ச்சைக்குரிய இந்த வழக்கில், பரபரப்பான தீர்ப்பு எதையும் கொடுக்கமாட்டார் என்பதுதான் ஜெ-சசி தரப்பு வக் கீல்களின் அனுமானம். கோர்ட்டி லிருந்து வெளியே வந்து, அதை அப்படியே கார்டனுக்கு பாஸ் செய்தனர். "313 ஸ்டேட்மெண்ட் கொடுத்தே ஆக வேண்டும்' என்று உத்தரவிட்ட நீதிபதி மல்லிகார்ஜூனய்யா போலவோ, "தற்காலிக நியமனமாக  இருந்தாலும் விசாரணை தொடரும்' என்ற நீதிபதி சோமராஜூ போலவோ எம்.எஸ். பாலகிருஷ்ணன் இருக்கமாட்டார் என்பதுதான் வழக்கறிஞர்களின் பார்வையாக  இருந்தது. 

அதையே, கார்டனிடம் தெரிவிக்க, உடனடியாக கார்டனில் ஸ்வீட் கொடுத்து, இதனைக் கொண்டாடியுள்ளனர்.

ad

ad