புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2012


ரஜினி பிறந்தநாளன்று 'சிவாஜி 3D' !

டிசம்பர் மாதம் பல்வேறு படங்கள் வெளியாக திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், ரஜினி நடிப்பில் 3Dல் தயாராகியிருக்கும் 'சிவாஜி 3D' படம் வெளியாக இருக்கிறதாம்.

ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'சிவாஜி 3D' படத்தினை
வெளியிட திட்டமிட்டு இருக்கிறது ஏ.வி.எம் நிறுவனம். ரஜினி, ஸ்ரேயா, சுமன் நடித்த சிவாஜி படத்தினை ஷங்கர் இயக்கி இருந்தார்.

இப்படம் 2007-ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜி படத்தினை 3Dல் வெளியிடலாம் என்று தீர்மானித்து அதற்கான பணிகளை ஏ.வி.எம் நிறுவனம் மேற்கொண்டு இருந்தது.

அப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் தீபாவளி அன்று வெளியிடலாம் என்று தீர்மானித்திருந்தார்கள். ஆனால் அதனைத் தள்ளி வைத்து,  படத்தினை ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்து விட்டார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம்மின் பிரமாண்டத் தயாரிப்பாக வெளிவந்த படம் சிவாஜி. வசூலிலும் பெரிய சாதனையை படைத்தது இந்த படம். சிவாஜி இப்போது 3டி வடிவம் பெற்றுள்ளது. பிரசாத் லேப் சிவாஜி படத்தின் காட்சிகளில் இருந்து சிவாஜி 3D ஐ உருவாக்கியிருக்கிறார்கள்.

இதற்கு கிட்டத்தட்ட 400 பேர் இரவு பகலாக ஒரு வருடமாக வேலை பார்த்தார்களாம். சிவாஜி 3D படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு பிரசாத் லேபில் இன்று நடைபெற்றது. இதில் ரஜினி கலந்து கொண்டார்.

சிவாஜி 3D படத்தின் டிரைலரும் வாஜி வாஜி… பாடலும் திரையிடப்பட்டன. ஷங்கர் பிரமாண்டமாக எடுத்த சிவாஜி படத்தை இதற்கு முன்பு பார்க்கும் போது அதன் பிரமாண்டம் அந்த அளவுக்குத் தெரியவில்லை. ஆனால் சிவாஜி 3டியில்தான் படத்தின் உண்மையான பிரமாண்டம் என்ன என்பது தெரிகிறது.

இந்த டிரைலரில் சிவாஜி நாணையத்தை சுண்டி போட்டு பூவா தலையா போடும் போது நாணையம் நம்மை நோக்கி வருவது… பாடல் காட்சியில் திரையரங்கினுள்ளே சிவாஜியும் ஷ்ரேயாவும் ஆடுவது போன்று தத்ரூபமாக இருக்கிறது.

இது போன்று உருவாக்கிய பிரசாத் லேப் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். டிரைலரையும் பாடலையும் பார்த்த பத்திரிகையாளர்கள் கைதட்டி பாராட்டினர். இதைவிட பல மடங்கு கைத்தட்டல்களும் பாராட்டுகளும் ரசிகர்களிடம் இருந்து சிவாஜி 3Dக்குக் கிடைக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.

ad

ad