புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 2013ம் ஆண்டுக்காக வரவு - செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.  நேற்று திங்கட்கிழமை சபையின் அமர்வில் தவிசாளரால் முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத்திட்டத்திற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் 4 பேர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்புச் செய்து வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்துள்ளனர். இவ் பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சி அமைத்து செயற்பட்டு வருகின்ற நிலையில் சபையின் மாதாந்த அமர்வு
நேற்று திங்கட்கிழமை பிரதேச பொது நூலக கேட்போர் கூடத்தில் தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் நடைபெற்றது.

சபையமர்வில் தவிசாளர், உபதவிசாளர் மற்றும் ஆளும்கட்சி உறுப்பினர்களும் எதிர்கட்சி உறுப்பினர்களுமாக 9 உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது தவிசாளரால் 2013 ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் முன்வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக சபை உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பிரதேசத்தில் உள்ள இரு மதுபானசாலைகளையும் அகற்றவேண்டும் என சகல உறுப்பினர்களும் தீர்மான் எடுத்துள்ளதுடன் இது தொடர்பாக மதுவரி திணைக்களம் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு கடிதம் அனுப்புவதாகவும் வேறு மதுபானசாலைகளும் இனி அமைப்பதற்கு அனுமதி வழங்கக் கூடாது எனவும் ஏக மனதாக தீர்மானித்தனர். 

பிரதேசத்தில் வீதிகள் அமைப்பது மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக பல வாதப் பிரதி வாதங்கள் இடம்பெற்றது. சபை ஆரம்பிக்கப்பட்டு 21 சபை அமர்வுகள் இடம்பெற்றுவரும் நிலையில் இது வரை நடைபெற்ற சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எவையும் சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டது. 

சபையின் நிதிக்குழு, அபிவிருத்திக்குழு என்பவற்றின் அங்கீகாரம் இன்றியும் பத்தாயிரம் ரூபாவுக்குமேல் பிரதேசத்தின் அபிவிருத்திக்கோ அல்லது ஏனைய நடவடிக்கைகளுக்கோ செலவு செய்வதாயின் சபையின் அங்கீகாரம் எடுக்கப்பட வேண்டும். 

இருந்தும் தவிசாளர் சபையின் அங்கீகாரம் இன்றி தன்னிச்சையாக செயற்பட்டுச் செலவு செய்வதாக தவிசாளருக்கு எதிராக உப தவிசாளர் சி.சியாம் சுந்தர், உறுப்பினர் காளிதாசன், மற்றும் எதிக்கட்சியின் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ரகுபதி, சந்திரகுமார் ஆகிய நான்கு உறுப்பினர்களும் எதிராக குற்றம் சுமத்தி சபையில் இருந்து வெளிநடப்புச் செய்து முன்வைக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்தனர். 

ad

ad