புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 டிச., 2012


இந்தியாவில் இசை, நடனம், நாடகம், திரைத்துறை மற்றும் பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைத் துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு இசை, நடனம், நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சார்பில் சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சங்கீத நாடக அகாடமி விருதுக்கு 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இசைஞானி இளையராஜா, ராஜசேகர் மன்சூர் (இந்துஸ்தானி குரலிசை), அஜய் போகங்கர் (இந்துஸ்தானி குரலிசை), சபீர் கான்(தபேலா), பகாவுதீன் தாகர் (ருத்ர வீணை), கர்நாடக இசைக்கலைஞர்கள் ஓ.எஸ்.தியாகராஜன் (குரலிசை), மைசூர் எம்.நாகராஜா (வயலின்), கே.வி.பிரசாத் (மிருதங்கம்), பாய் பல்பீர் சிங் ரகி(குர்பானி) ஆகிய 9 பேருக்கு இசைத்துறைக்கான சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட உள்ளது.

வயலின் வித்துவான் என்.ராஜம், கிராமி விருது பெற்ற கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம், பிரபல நாடக ஆசிரியர் ரத்தன் தியாம் ஆகியோர் மதிப்பு மிக்க சங்கீத நாடக அகாடமி பெல்லோஷிப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த விருது இதுவரை 40 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த பங்களிப்பு மற்றும் உதவி செய்தமைக்காக நந்தினி ரமணி மற்றும் அருண் காகடே ஆகியோரும் அகாடமி விருது பெறுகின்றனர்.

பெல்லோஷிப் விருது 3 லட்சம் ரொக்கப்பரிசு, தாமிர பட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவற்றைக் கொண்டது. அகாடமி விருதானது ரூ.1 லட்சம் பரிசுத்தொகை, தாமிர பட்டயம், அங்கவஸ்திரம் ஆகியவற்றைக் கொண்டது.

ad

ad