புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2012




 ''சமூக, அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தலித் - தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை உருவாக்க நினைப்பது மிக மோசமானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் பா.ம.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்!'' 
ர்மபுரி தீ இன்னும் அடங்கவில்லை. தலித்-தலித் அல்லாதோர் பிரிவினையாக, அதை மாநிலம் முழுக்க விரிவுபடுத்தும் சதியை சிலர் செய்ய ஆரம்பித்துள்ளார்கள். 'இது மிக அபாயகரமான போக்கு’ என எச்சரிக்கும் அரசியல் தலைவர்கள், கடந்த வாரம்
'சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம்’ மூலம் சென்னை யில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள். எழுத்தாளர்கள், கலைஞர் கள், மனித உரிமை அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினர் பங்கெடுத்தார்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில்.
    நீண்ட காலத்துக்குப் பின்பு ஒரு குறிப்பிட்ட பிரச்னையை ஒட்டி அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்திருப்பது இந்த விஷயத்தில்தான். ''சமூக, அரசியல் விழிப்பு உணர்வு அதிகம் உள்ள தமிழ்நாட்டில் தலித் - தலித் அல்லாதோர் என்ற பிரிவினையை உருவாக்க நினைப்பது மிக மோசமானது. இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் பா.ம.க-வைத் தனிமைப்படுத்த வேண்டும்!'' என்றார்கள் ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள். இதுகுறித்து நாம் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பேசினோம்.
நல்லகண்ணு, சி.பி.ஐ.: ''இது அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூகப்பிரச்னை. தர்மபுரியில் நடந்தது இந்தியாவின் தலைகுனிவு. சித்தர்கள் காலத்தில் இருந்து சாதி எதிர்ப்புப் பேசிய மரபு நமக்கு இருக்கிறது. தேசிய, பெரியாரிய, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனைத்தும் சாதியை எதிர்த்துதான் அரசியல் செய்துவருகின்றன. ஆனால், இப்போது 42 சாதிகளை ஒருங்கிணைத்து 'தலித் அல்லாதோர் அணி’யை உருவாக்க பா.ம.க. முயற்சி செய்கிறது. அப்படியானால், அது ஓர் அரசியல் கட்சியே இல்லை என்று கருத வேண்டியிருக்கிறது. 'காதல் கூடாது, கலப்புத் திருமணம் கூடாது’ என்று சொல்வது சமூகத்தைப் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்குத்தனமான வேலை. தர்மபுரியில் '40 வருஷமா நான் சேர்த்த சொத்து எல்லாம் போச்சே’ என்று ஒருவர் கதறினார். அப்படியானால் சமூகம் 40 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்று அர்த்தம். புதிய சமூக மாற்றங்களை ஜீரணிக்க முடியாதவர்களின் இத்தகைய போக்கு, இத்தனை வருடத் தமிழகத்தின் பெருமையைச் சீரழித்துவிடும்!''
ஜி.ராமகிருஷ்ணன், சி.பி.எம்: '' 'காடுவெட்டி’ குரு பேசும்போது அது அவரது சொந்தக் கருத்து என்றுதான் பலரும் நினைத்தார்கள். இப்போது பா.ம.க. தலைமையின் கருத்தும் அதுதான் என்பது தெரிகிறது. சாதி மோதலை உருவாக்கும் வித மாகச் செயல்படும் பா.ம.க-வின் நடவடிக்கைகளை மற்ற ஜன நாயக அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முறிய டிக்க வேண்டும். வன்கொடு மைத் தடுப்புச் சட்டம் இன்னும் முழு வீச்சில் பயன்படுத்தப்பட வேண்டும். 'கௌரவக் கொலை கள்’ என்ற பெயரிலான உயிர்ப் பலிகளுக்கு எதிராக அந்த சட்டத்தில் தனிப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
சாதி மறுப்புத் திருமணம், சாதியை ஒழிப்பதற்கான வழி என்பதைத் தாண்டி, தன் வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்வது அடிப்படை உரிமை. இதற்கு எதிராகப் பேசுவதே அரசியல் சட்டத் துக்கு விரோதமானது!''
ஞானதேசிகன், காங்கிரஸ்: ''அரசியல்ரீதியாகத் தோல்வியைச் சந்தித்துவரும் பா.ம.க., வரப்போகும் 2014 தேர்தலைக் குறிவைத்து சாதியைக் கையில் எடுத்திருக்கிறது. மற்றபடி இதில் சமூகப் பிரச்னையோ, காதல் பிரச்னையோ இல்லை. அதேபோல ஒரு சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தையே வாபஸ் வாங்க வேண்டும் என்பதும் தவறானது. காலில் ஒரு புண் என்றால், காலையே வெட்ட முடியாது.''
டி.கே.எஸ்.இளங்கோவன், தி.மு.க.: ''கட்சிகள், இயக்கங்கள் எல்லாம் பிரசாரம் செய்து சாதி ஒற்றுமையைத்தான் உருவாக்க முடியும். சாதியை ஒழிக்க கலப்புத் திருமணங்கள்தான் ஒரே வழி. இது மருத்துவர் ராமதாஸுக்கோ, பா.ம.க. நிர்வாகிகளுக்கோ தெரியாதது அல்ல. பெயருக்குப் பின்னால் சாதிப் பெயரைப் போடும் வழக்கத்தை விட்டொழித்து, இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழ்நாட்டில் மீண்டும் இத்தகைய நிலைமை உருவாவது ஆரோக்கியமானது அல்ல!''
திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: ''எம்.ஜி.ஆர். ஆட்சியில் இதே மருத்துவர் ராமதாஸ் சாதி உணர்வுகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தியபோது, எம்.ஜி.ஆர். அனைத்துச் சாதி அமைப்புகளின் கூட்டத்தையும் கூட்டி அமைதியை ஏற்படுத்தினார். இப்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில்கொண்டு, முதல்வர் ஜெயலலிதா அப்படி ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும். மாறாக, மௌனமாக வேடிக்கை பார்ப்பது நல்லாட்சிக்கு அழகல்ல.''
ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி: ''தர்மபுரி தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தலித்கள். அந்த தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை 'வன்முறைக் கும்பல்’ என்று ராமதாஸ் மலினப்படுத்துகிறார். அவரது இந்தப் பேச்சு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்வதற்கான எல்லா முகாந்திரங்களையும் கொண்டிருக்கிறது. தலித்களுக்கு எதிராகச் சாதி அமைப்புகளை ஒன்று திரட்டுவதும், தமிழ்நாட்டைப் பழைய நிலைக்கு அழைத்துச் செல்ல நினைப்பதும் ஆபத்தானது. பெரியாரையும், மார்க்ஸையும், அம்பேத்கரையும் தன் கட்சி அடையாளத்தில் பயன்படுத்தும் அவர், அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ள வேண்டும். இல்லா விட்டால், அரசியலில் ராமதாஸைத் தனிமைப் படுத்துவோம் என்று முழங்க வேண்டிஇருக்கும்!''
கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகம்: '' 'பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம்’ இயங்கிய தமிழ்நாட்டில், இப்போது 'தலித் அல்லாதோர் இயக்கம்’ கொண்டுவர முயற்சிக்கிறார்கள். சமூக நீதி கேட்டுப் போராடி முன்னேறியவர்கள், இப்போது அதே சமூக நீதிக்கு எதி ராகச் செயல்படுகின்றனர். 'தலித் இளைஞர்கள் கூலிங்கிளாஸ்அணிந்து கொண்டு, ஜீன்ஸ் பேன்ட் போட்டுக்கொண்டு வன்னியர் பெண்களை ஏமாற்றுகிறார்கள்’ என்று ராமதாஸ் சொல்வது உண்மையில் வன்னியர் பெண்களை அவமானப்படுத்தும் செயல். ஏற்கெனவே சில வருடங்களாகக் காதலுக்கு எதிராகப் பேசிவரும் இவர், இப்போது காதல் திருமணம், கலப்புத் திருமணம் என முற் போக்கான அம்சங்கள் அனைத்தையும் எதிர்க்கிறார். இப்போதே இதைத் தடுத்தாக வேண்டும்!'

ad

ad