18 ஜன., 2013மன்னார் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்று காலை 10 மணியளவில் குடைசாய்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மன்னார்- தலைமன்னார் வீதியில், கரசல் இரண்டாம் கட்டை சந்தியில் வைத்து பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.இவ்விபத்துச் சம்பவத்தில் ஆண்கள் நான்கு பேரும், பெண்கள் எட்டு பேரும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த விபத்து தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.