புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2013


இணையத்தளம் முடக்கப்பட்டதா? எனக்கு தெரியாது: ஊடகத்துறை அமைச்சர்

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்தியநிலையத்தின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது. என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வல தெரிவித்தார்.


ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

கேள்வி நேரத்தின் போது, தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையத்தின் இணையத்தளம் மீது சைபர் தாக்குதல் ஒன்று மேற்;கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா? என ஊடகவியலாளர் வினவினார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய பாதுகாப்புக்கான ஊடகமத்திய நிலையத்தின்  இணையத்தளம்  முடக்கப்பட்டுள்ளதாக (ஹெக்) சமுக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இணையத்தளங்களை முடக்குபவர்களினாலேயே இந்த இணையத்தளமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சைபர் தாக்குதல் ஒன்றின் மூலமே குறித்த இணையத்தளம் நேற்று தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தளம் இன்னமும் முடங்கிய இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கணணி அவசர உதவி மற்றும் பொருப்புக்கூறலுக்கான குழு (SLCERTஇலங்கையின் அனைத்து இணையத்தளங்களினதும் பாதுகாப்பு குறித்து கடந்தவாரம் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதுகாப்பு தகவல்களை ஒருங்கிணைக்கும் நிலையமாக உருவாக்கப்பட்ட பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் தேசிய பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் பேச்சாளராக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ad

ad