புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 பிப்., 2013


கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை! விஸ்வரூபம் படம் குறித்து ஜெயலலிதா பேட்டி!
 
விஸ்வரூபம் திரைப்படம் குறித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று (31,01,2013) செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது


கடந்த சில நாட்களாக பத்திரிகைகளில் பரபரப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. சூழ்நிலைகளை புரிந்து கொள்ளாமல் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பத்திரிகைகளில் வெளிவந்ததை தெளிவுபடுத்தவே இந்த விளக்கம்.

படத்தை திரையிடும் முன் தடை செய்திருக்க கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். பாதுகாப்புடன் திரையரங்குகளில் திரையிட அனுமதித்திருக்க வேண்டும் என்றும் கருத்து வெளியானது. மாநிலத்தின் சில இடங்களில் வன்முறை நிகழலாம் என உளவுத்துறை கூறியது.

அரசு என்ன செய்ய முடியும். போலீஸ் என்ன செய்ய முடியும். தமிழக அரசிடம் குறைந்த அளவே போலீஸ் பலம் உள்ளது. எனவே விஸ்வரூபம் படத்தை தடை செய்ய நேரிட்டது.

முதலமைச்சர் என்ற வகையில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதே எனது பணி. 24 இஸ்லாமிய அமைப்புகள் படத்தை தடை செய்யக்கோரி மனு அளித்தனர். படத்தில் ஆட்சேபமான காட்சிகள் இருப்பதால் தடை செய்ய கோரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் 524 திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படம் திரையிட இருந்தது.

தமிழகத்தில் காவலர் எண்ணிக்கையை கொண்டு பாதுகாப்பு தருவது கடினமானது. தமிழ்நாட்டின் மொத்த காவலர் எண்ணிக்கை 87 ஆயிரத்து 226. 524 திரையரங்குகளுக்கு 3 காட்சிகளுக்கு பாதுகாப்பு தர 56 ஆயிரத்து 440 காவலர்கள் தேவை. தமிழக காவலர்களை கொண்டு திரையரங்குக்கு பாதுகாப்பு தர சாத்தியமில்லை.
படத்தின் தடை விவகாரத்தில் குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டுள்ளேன். எனக்கு கமல் மீது எந்தவித தனிப்பட்ட விரோதமும் கிடையாது. எந்த உள்நோக்கத்துடனும் தடை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கமல் குறித்து பல ஆண்டுகளுக்கு முன் எம்ஜிஆருக்கு கடிதம் எழுதவில்லை. கடிதம் எழுதியதாக கூறவது என் மீதான நகைப்புக்குரிய அபத்தமான குற்றச்சாட்டு. அவதூறான குற்றச்சாட்டை கூறியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  
வேஷ்டி கட்டியவரை கமல் ஆதரித்து பேசியதால் தடை செய்ததாக கூறுகிறார்கள். கமலுக்கு என்று தனிப்பட்ட முறையில் அரசியல் கருத்துக்கள் கூற உரிமை உண்டு. 
படத்தின் பிரச்சனையை இஸ்லாமிய அமைப்புகளுடன் கமல் பேசி தீர்க்க வேண்டும். கமல் முன்னதாக அணுகியிருந்ததால் சிக்கலை தீர்க்க அரசு நடவடிக்கை எடுத்திருக்கும். 
விஸ்வரூபம் படத்திற்கு அனுமதி அளித்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியும், ஜெயா டி.வி.க்கு விஸ்வரூப திரைப்படத்தின் ஒளிபரப்பு உரிமை வழங்கப்படாதது தான் காரணம் என ஒரு அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

எனக்கும் கமலுக்கும் என்ன பிரச்னை இருக்கிறது. நான் ஏன் கமல் மீது தனிப்பட்ட விரோதம் கொள்ள வேண்டும்? கமல் எனக்கு எந்த வகையிலும் விரோதி இல்லை. இவ்வாறு கூறினார்.

ad

ad