புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படும் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பதற்கு புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது: 

திமுக துணையுடன் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசானது காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை மாற்றந்தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து நடத்தி வருகிறது
. இதை அதிமுக உட்பட மாநிலங்களை ஆளும் எதிர்கட்சிகள் கண்டித்து வருகிறன. 

குறிப்பாக தமிழர் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் மத்திய அரசு துரோகம் செய்வதுடன் எதிர் நடவடிக்கையையும் எடுத்து வருகிறது. தமிழகத்திற்கு கிடைக்கவேண்டிய நியாயமான உரிமைகளையும் மத்திய அரசு தர மறுக்கிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் துன்பறுத்தப்பட்டு வருகின்றனர். 

இதை மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இதை திசை திருப்பும் நோக்கத்துடன் பிரதமர் அலுவலக போஸ்ட்மேன் மத்திய அமைச்சர் நாராயணசாமி பொய்யான தகவல்களை கூறியுள்ளார். கச்சத்தீவை மத்திய அரசு என்று தாரை வார்த்ததோ, அன்று முதல் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்வதுடன் மீன்பிடி கலங்களையும் அழித்து வருகிறது. தமிழக மீனவர் பிரச்னை சர்வதேச பிரச்சினை. 

இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார். அதிமுக சார்பில் பல கட்ட போராட்டமும் நடந்துள்ளது. 

ஆனால் இந்த பிரச்னையை தமிழக, இலங்கை மீனவர்களிடையே பஞ்சாயத்து நடத்தினால் தீர்ந்துவிடும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியிருப்பது நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது. மத்திய அமைச்சரவையில் நாராயணசாமி ஒரு காமெடியனாக திகழ்கிறார். இதை பல பத்திரிகைகளும், இணையதளத்திலும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

மத்திய அரசு கடிதம் எழுதியும் தமிழக அரசு பதில் தரவில்லை என பொய்யான கருத்தை கூறியுள்ளார். முல்லை பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை போன்ற தமிழக நலன் காக்கும் பல பிரச்னைகளில் மத்திய அரசை வலியுறுத்தி பல முறை கடிதம் எழுதியும், சுட்டிக்காட்டியும் எந்த பதிலும் மத்திய அரசு தரவில்லை. மாநிலங்களின் உரிமைகளை பறிப்பதில்தான் மத்திய அரசு கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ad

ad