புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013


வடக்கில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று அரசு பகிரங்கமாகவே சர்வதேசத்திற்கு  அறிவித்துவிட்டது. இந்நிலையில் முன்னாள் விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கின்றார்கள் என்று இராணுவம் கூறுவதில் நியாயம் இல்லை. 
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கில் இராணுவத்தினருக்கு என்ன வேலை? எமது தமிழ்ப்  பிள்ளைகளை சுதந்திரமாக வாழவிடுங்கள்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
வடக்கில் ஆயிரம் முன்னாள் போராளிகளை இன்னமும் படைப் புலனாய்வாளர்களும், பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரும் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.  இந்த முன்னாள் போராளிகள்  விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார்கள் என்பதை மறைத்து புனர்வாழ்வு பெறாமல் நழுவியுள்ளார்கள். இவ்வாறானவர்களே வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது” – என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி மேற்கண்டாவறு தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கு தமிழரின் தாயகம். இங்கு ஆயுதப் போராட்டம் தற்போது இல்லை. எனவே,  தமிழ் மக்கள் அனைவரும் தாம் சுதந்திரமாக வாழவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். இந்நிலையில் தமிழ் இளைஞர்களுக்கு  புலி முத்திரை குத்த நாம் விடமாட்டோம்” – என்றும் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
வடக்கில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்களில் முன்னாள் போராளிகள் ஈடுபடுகின்றார்கள் என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். இங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர், ஒட்டுக்குழுக்களுமே முழுக்காரணம்” என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி  மேலும் தெரிவித்தார்.

ad

ad