புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஜன., 2013




         னது பெயரில் எந்த ஒரு அமைப்பும் செயல்பட அனு மதித்ததில்லை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால், கவிஞர் இலக்கியா நடராஜ னிடம் தனக்கிருக்கும் நட்பின் அடையாள மாக, அவர் உருவாக்கிய "ப.சிதம்பரம் கலை இலக்கியப் பேரவை' என்று அமைப்பிற்கு மட்டும் அனுமதி தந்ததுடன் அங்கீ கரிக்கவும் செய்தார். இந்த அமைப்பின் மூலம், இலக்கியா நடராஜன் தொகுத்து தயாரித்த "ப.சிதம்பரம் : ஒரு பார்வை' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த சனியன்று(29-ந் தேதி) சென்னை காமராஜர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடந்தது.thx nakeran

விழா ஏற்பாடுகள் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார் கார்த்தி சிதம்பரம். விழாவிற்கு "சரியான நேரத்துக்கு வந்துடுவேன்' என கராத்தே தியாகராஜன் மூலம் தகவல் தந்தார் ரஜினி. நிகழ்ச்சிக்கு கலைஞர் வருவதற்கு அரை மணிநேரம் முன்னதாகவே ரஜினி, கமல் உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர். மேடை யின் பின்புறம் அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார் சிதம்பரம். அப்போது, ரஜினியிடம் ""உங்களின் பெர்சனல் ப்ரோக்ராமை தள்ளிவைத்துவிட்டு விழா வுக்கு வந்ததற்கு நன்றி'' என்றார். ""விழாவில் இருக்கணும்னு முடிவு செஞ்சேன். அதான் சரியா வந்துட்டேன் சார்'' என்றார் ரஜினி. புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் சிதம்பரத் தின் தாயார் லெட்சுமி ஆச்சியும் அங்கி ருந்தார். அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தனர் ரஜினியும் கமலும். கூடுதலாக பழைய சம்பவங்கள் சிலதை ப.சி.யிடமும் ரஜினியிடமும் பகிர்ந்து கொண்டார் கமல்.

அரங்கத்தில் கட்டுக்கடங்காத கூட் டம் அலைமோத, 5 மணிக்கு கலைஞர் வரவும் விழா துவங்கியது. பாலியல் வன்முறைக்கு பலியான மாணவிக்கு இரண்டு நிமிட அஞ்சலி செலுத்த ப.சிதம் பரம் அறிவிக்கவும் அஞ்சலி செய்யப்பட் டது. அஞ்சலி முடிந்ததும் மேடையில் அமராமல் பார்வையாளர்கள் வரிசையில் வந்து அமர்ந்துகொண்டார் ப.சிதம்பரம். தலைவர்களையும் பிரபலங்களையும் வரவேற்று விழாவை கம்பீரமான குரலில் இலக்கியா நடராஜன் தொகுத்து வழங்க, புத்தகத்தின் முதல் படியை கலைஞர் வெளியிட, அதனைப் பெற்றுக்கொண்டார் ப.சி.யின் தாயார் லெட்சுமி ஆச்சி.


விழாவில் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன், பேராசிரியர் அப்துல்காதர், அவ்வை நடராஜன், ஞான தேசிகன், வைரமுத்து ஆகியோர் ப.சிதம்பரத்தின் அறிவாற்றலையும் இலக்கிய ஆளுமையையும் அவரது எளிமையையும் விவரித்துவிட்டு பிரதமராகும் தகுதி வேட்டிச் சட்டை அணிந்த ப.சி.க்கு இருப்பதாக சுட்டிக்காட்டினர். ப.சி.யைப் பற்றி பேசிய கமல், ""என் தாயார் இறந்தபோது துக்கம் விசாரிக்க வந்த நளினி சிதம்பரத்தின் தாயார், "கமல் உன் அம்மா இறந்துட்டாங்கன்னு நினைக்காதே. வீடு மாறிட்டாங்கன்னு நினைச்சிக்கோ. இனி என் வீடு தான் உன் வீடு'ன்னு சொன்னாங்க. அதிலிருந்து நான் அவங்க ளோட மகனாயிட்டேன். அப்படிப் பார்த்தால் ப.சிதம்பரம் எங்க வீட்டு மாப்பிள்ளை'' என்றபோது கலைஞர், சிதம்பரம், ரஜினி உட்பட அரங்கமே ரசித்தது.

ரஜினி பேச அழைக்கப்பட்டபோதே அவர் என்ன பேசுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. அதற்கேற்ப அரசியலை தொட்டார் ரஜினி. 1996-ல் த.மா.கா. உருவான போது அதில் தான் சம்பந்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ரஜினி, ""அப்போது எனக்கு அரசியல் தெரியாது. ஆனா டி.எம்.சி. உருவான சமயத்தில் கலைஞர், மூப்பனார், சிதம்பரத் தின் சினேகம் ஏற்பட்டு அவர்களோடு  தனி அறைகளில்  நிறைய பேசியிருக்கேன். அப்போதான் அரசியலும் அது எவ்வளவு கடினமானது என்பதும் எனக்கு  புரிந்தது. டி.எம்.சி.க்கான அங்கீகாரத்தை பெற்றுத் தர சிதம்பரம் எவ்வளவு கஷ்டப்பட்டாருங்கிறது எனக்குத் தெரியும். அப்போ ஒருமுறை என்னிடம் பேசிய சிதம்பரம், "உங்க ரசிகர் மாதிரி நானும் கேட்கிறேன். அரசியலுக்கு எப்போ வரப்போறீங்க?'ன்னு கேட்டார். "நான் அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும்'னு சொன்னேன்''’என்று அரசியல் ஆர்வம் தனக்கிருப்பதை சுட் டிக்காட்ட, செம கைத் தட்டல்.

இறுதியில் பேசிய கலைஞர், தி.மு.க.வும் த.மா.கா.வும் கூட்டணி வைக்க ரஜினி, சோ உள்ளிட்டவர்களின் முயற்சிகளை விவரித்து விட்டு, ""அரசியலுக்குள் என்னை இழுக்காதீர்கள் என ரஜினி நினைக்கக்கூடும். மறை முகமாக உங்களை அரசியலுக்குள் இழுக்கத்தான் செய்வோம்'' என்று சொல்லிவிட்டு, முடக்கப்பட்டு கிடக்கும் சேது சமுத்திர திட்டப் பணிகளை நிறைவேற்றும் பொறுப்பை ப.சிதம்பரத் தின் தலையில் சுமத்தினார் கலைஞர். நிகழ்ச்சி முடிந்ததும் முதல் நபராக ரஜினி கிளம்ப, ஓடோடிச் சென்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு ப.சி. நன்றி சொல்ல, பதறிப்போன ரஜினி ""என்ன சார் நீங்க... எனக்குப் போய் நன்றி சொல்லணுமா?'' என்றார். 


விழாவில் கலந்துகொண்ட ரஜினி ரசிகர்கள், ""தனது பிறந்த நாளின் போது அரசியலுக்கு வர மாட்டேன்னு எந்த இடத்திலும் ரஜினி சொல்ல வில்லை. ஆனா இப்போ அரசியலுக்கு வந்தா என் வழி தனி வழியாக இருக்கும்னு சொல்லியிருப்பதன் மூலம் அரசியல் ஆர்வம் தனக்கிருப்பதை பகிரங் கப்படுத்திவிட்டார். கலைஞர் இருக்கும்போது அரசியலுக்குள் வருவதை விரும்பாமலிருந்த எங்க தலைவர், ஏதோ ஒரு முடிவை எடுத்துவிட்டதால் தான் இப்போ தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி யிருப்பதாக நினைக்கிறோம்'' என்றனர். இந்த கருத்துக்களே விழாவில் கலந்துகொண்ட தி.மு.க., காங் கிரஸ் தொண்டர்களிடையேயும் எதிரொலித்தது.

கலைஞர், ப.சிதம்பரம் விழாவில் ரஜினி கலந்து கொள்வதால் துவக்கத்திலிருந்தே உற்று கவனித்துக் கொண்டுதானிருந்தது ஆட்சித் தலைமை. இதற்காக தகவல் சேகரித்த உளவுத் துறை, ரஜினி வரமாட்டார் என்றும் வந்தாலும் அர சியல் பேசமாட்டார் என்றும் வெவ்வேறான தகவல் களை மேலிடத்துக்கு பாஸ் செய்ய, மேலிடத்திற்கு டென்ஷன். இதனால் பாதுகாப்பு பணியில் போலீ ஸார் அக்கறை காட்டாமலிருக்க, கார்த்தி சிதம்பரத் தின் ஆலோசனையின் பேரில் மத்திய உளவுத்துறை அதிகாரிகளிடம் பேசினார் கராத்தே தியாகராஜன். மத்திய உளவுத்துறை அதிகாரி எடுத்த முயற்சியால் போலீஸார் சிலரை மட்டும் அரங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்களே தவிர பாதுகாப்புப் பணியில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை ஆளும் தரப்பு.

"காங்கிரஸ் வரலாற்றில் ஒரு நூல் வெளியீட்டு விழா பிரமாண்டமான அரசியல் மாநாடு போல நடந்து முடிந்திருக்கிறது' என்கிறார்கள் கதர் சட்டையினர்.

-ஆர்.இளையசெல்வன்
படங்கள் : ஸ்டாலின்

ad

ad