புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013



          ""ஹலோ தலைவரே... தமிழர் திருநாள்- தமிழ்ப் புத்தாண்டு- பொங்கல் நன்னாள்னு முக்கனி சுவைபோல தித்திக்குது தை 1.''

""பவர்கட்டு, விலைவாசி, வறட்சி மூன்றும் மக்களை வாட்டுது. தை பிறந் தால் வழிபிறக்கும்னு சொல்லுவாங்க. இந்தத் தை கொஞ்சமாவது வலியைக் குறைச்சால் போதும்ங்கிறதுதான் மக்க ளோட எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டோட நிலைமையைக் காட்டு கிற மாதிரி, பொங் கல் நாளில் அரசு அலுவலகக் கட்டிடங்கள் எல்லாம் இருண்டு கிடக் குது. தி.மு.க. ஆட்சியில் தை 1 தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக எல்லா அலுவலகங்களும் ஜெகஜோதியா மின்னிக்கிட்டிருந்தது ஞாபகமிருக்கா?''

""போன ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்டதை கை விடுறதுதானே இந்த ஆட்சியோட பாலிசி. அதுபோகட்டும்.. பொங்கல் விடுமுறை முடிந்ததும், ஜனவரி 17-ந் தேதி எம்.ஜி. ஆர். பிறந்தநாள். சென்னையில் உள்ள கட்சித் தொண்டர் களெல்லாம் தலைமைக் கழகத்தில் குவிஞ்சிடுறது வழக்கம். அங்கே உள்ள எம்.ஜி.ஆரோட சிலைக்கு இந்த முறை மாலை போட ஜெ. வருவாரான்னு எதிர்பார்ப்போடு இருக்காங்க.'' 

""கொடநாட்டில் இருக்கும் ஜெ., சென்னைக்குத் திரும்பி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்துக்குறாராமா?''

""சிம்ம ராசி. மிதுன லக்னகாரரான ஜெ.வுக்கு ஜனவரி 18-ந் தேதி குருபகவான் நீட்சம் அடைவதா ஆஸ்தான ஜோசியர்கள் சொல்லியிருக்காங்க. 15-ந் தேதி தேனி மாவட்டத்தில் நடக்கும் பென்னிகுக் சிலை மற்றும் மணி மண்டபம் திறப்பு விழாவுக்கு செல்லும் ஜெ., திரும்பவும் கொடநாடு ரிட்டன்  ஆயிடுறாராம். 16-ந் தேதி குரு நீட்ச பங்க ராஜயோகம்ங்கிற யாகம் தொடங்குதாம். குரு நீட்சம் அடையும் 18-ந்  தேதி வரை நடக்கும் இந்த யாகத்தின்போது பசுமையான மலைப்பகுதியில் இருப்பதுதான் நல்லதுன்னும் ஜோசியர்கள்  சொல்லியிருக்காங்களாம். அதுவரை மலை யிலிருந்து கீழே இறங்கக்கூடாது என்பதால்  எம்.ஜி.ஆர். பிறந்தநாளன்று தலைமைக்கழகத்திற்கு வராமல் நீலகிரி மலையில் உள்ள கோத்தகிரியிலேயே சிலை திறந்து பிறந்தநாள் விழா கொண்டாட முடிவாகியிருக்குது.''

""அப்படின்னா ஜெ.வின் சென்னை ரிட்டன் டேட் எதுவாம்?''நக்கீரன் 
""அநேகமா 24-ந் தேதி இருக்கும்னு தகவல்கள் வருது.  அதற்கிடையில், எம்.பி. தேர்தல் தொடர்பா மிக முக்கியமான ஆலோசனைகளும் முடிவுகளும் எடுக்கப்படுமாம். பொதுக்குழு வில் பேசுறப்ப தனித்துப் போட்டின்னு ஜெ. அறிவித்தது வெறும் பல்ஸ் பார்க்கும் டெக்னிக்தானாம். அடிப்படை பிரச்சினைகள் தீர்க்காததால மக்களோட எதிர்ப்பு அதிகமா இருக்குன்னும் தி.மு.க.வோடு தே.மு.தி.க. கூட்டணி சேரும் வாய்ப்பு அதிகமா இருப்பதாகவும் ஜெ. கைக்கு ரிப்போர்ட் வந்திருப்பதால, அ.தி.மு.க.வும் கூட்டணிக்கு ரெடியாகி, அது சம்பந்தமான ரகசிய பேச்சுவார்த்தைகளும் தொடங்கிடிச்சி. முதல் ரவுண்டு யாரோடு நடந்திருக்கு தெரியுமா?''

""யாரோடு?''

""ம.தி.மு.க.வோடுதான்.. .. பேச்சு நடத்தியவர் ஓ.பி.எஸ். வைகோ கேட்டது 3 தொகுதிகளாம். இந்தத் தகவல் கொடநாட் டுக்கு பாஸ் பண்ணப்பட, அவங்களுக்கு 2 தொகுதிகள்தான்னு ஓ.பி.எஸ். மூலமா சொல்லிவிட்டிருக்கிறார் ஜெ. அதோடு, எந்தத் தொகுதிகள்னு சொல்லப்பட்டிருக்கு. ஒன்று, கனிமொழி எங்கே போட்டியிடுறாரோ அந்த தொகுதி. இன்னொன்று, வைகோ போட்டியிடுவதற்காக தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி. இதுதான் ஜெ.வின் முடிவு. வைகோ கொஞ்சம் அப்செட்டாம். அ.தி.மு.க.வில் தூத்துக்குடி தொகுதியை எதிர்பார்த்திருக்கும் பி.ஹெச். பாண்டியனும் அப்செட்டாம்.'' 

""கூட்டணியில் வேறு எந்தெந்த கட்சிகளை சேர்க்கும் திட்டம் இருக்குதாம்?''

""நிரந்தர பார்ட்னரா இருக்கிற தா.பாண்டியனின் சி.பி.ஐ.கிட்டேயும் பேசப்பட்டிருக்கு. அம்பேத்கர் விருதும் தா.பா.வுக்கு வழங்கப்பட்டிருக்கே.. சி.பி.எம். ஏற்கனவே அ.தி.மு.க. லைனை ஒட்டித்தான் இருக்குது. டி.கே.ரங்கராஜன்தான் சி.பி.எம். சார்பில் கான்டாக்ட்டில் இருக்காராம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா 2 சீட் என்பது  ஜெ.வின் முடிவு. தோழர் களோ தலா 4 தொகுதிகளை எதிர்பார்க்குறாங்களாம். பா.ம.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ப்பதா வேண்டாமாங்கிறதில் ஜெ.வுக்கு இரண்டு மனநிலை இருக்குதாம்.''

""காருள்ளளவும் கடல் நீருள்ளளவும் திராவிட கட்சிகளோடு கூட்டணியே கிடையாதுன்னு ராமதாசும் சொல்லிக்கிட்டிருக்காரே..'' 

""அதை அவரது கட்சிக்காரர்களே பெருசா எடுத்துக்கலை. அய்யாவோட சபதமெல்லாம் எலெக்சன் வரைக்கும் தான்னு சொல்றாங்க. பா.ம.க. தரப்போடு அமைச்சர் கே.பி.முனுசாமி பேசிக்கிட்டுத்தான் இருக்காரு. ஜெ.வின் கணக்குப்படி பா.ம.க.வுக்கு 3 சீட்டுகளாம்.''

""போனமுறை 7 சீட்டு நின்றவங்களாச்சே ஒத்துக்குவாரா டாக்டர்?''

""அதற்கு முன்னாடி எலெக்சன் வரைக்கும் பா.ம.க.வோட எம்.பி.க்கள் பலம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அதனாலதான் போனமுறை 7 சீட்டு கள் கிடைத்தது. அத்தனையிலும் தோற்றுவிட்டதால், இப்ப பா.ம. க.வோட பலம் ஜீரோதானே… அத னால 3 சீட்டுக்கு டாக்டர் ஒப்புக் கொள்வாருன்னு ஆளுந்தரப்பில் சொல்றாங்க. அ.தி.மு.க.வுக்கு 31 தொகுதிகள். ம.தி.மு.க 2, சி.பி.எம். 2, சி.பி.ஐ. 2, பா.ம.க. 3. இதுதான் அவ ரோட எம்.பி.. தேர்தல் ஃபார்முலா.''


""தே.மு.தி.க. தலைவர் விஜய காந்த், யாருடனும் கூட்டணி கிடை யாதுன்னு உறுதியா சொல்லிக் கிறேன்னு அறிவிச்சிருக்காரு. அவ ரோட மனைவி பிரேமலதா தஞ்சா வூரில் பேசுறப்ப, அழகிரி அஞ்சா நெஞ்சனான்னு கிண்டல் செஞ்ச தோடு, விமானத்தில் வர்றப்ப மு.க. அழகிரியை கேப்டன் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்ததுன்னும் ஆனா இரண்டு பேரும் எதுவும் பேசிக் கலைன்னும் சொல்லியிருக்காரே.. என்னதான் நடக்குதாம்?''

""ஃப்ளைட்டிலிருந்து இறங்கி வரும்போது அழகிரியும் விஜயகாந்த் தும் பேசிக்கிட்டுத்தான் வந்திருக் காங்க. முதல்வர் பதவிக்கு ஆசைப் பட்ட விஜயகாந்த் மேலே 4 வழக்கு போட்டதும் ஓடிட்டாருன்னு அழகிரி பேசியது சம்பந்தமா செய்தி வந்ததே அது பற்றி விஜயகாந்த்கிட்டே நேரிலே பேசுன அழகிரி, பிரஸ்ஸில் சொன்ன தை பெருசா எடுத்துக்க வேணாம். நான் ஒண்ணு சொல்ல, அவங்க ஒண்ணு போட்டுட்டாங்க. ஒரு நாள் ஃபேமிலியோடு வீட்டுக்கு வாங்கன்னு சொல்லியிருக்காரு. அரசியல் பற்றி யோ கூட்டணி பற்றியோ எதுவும் பேசலையாம்.''

""விஜய்காந்த்தோட ரியாக்ஷன் என்னவாம்?''

""அழகிரிகிட்டே அவர் பெருசா ரியாக்ஷன் காட் டிக்கலை. ஆனா, தனக்கு வேண்டியவங்ககிட்டே பேசுறப்ப, கூட்டணி பற்றி அழகிரி பேசுவாருன்னு எதிர்பார்த்தேன். அப்படி பேசியிருந்தா, உங்க அப்பாகிட்டே சொல்லி எங்களுக்கு 10 எம்.பி. சீட், 1 கேபினட், 2 இணையமைச்சர் பதவிக்கு ஒப்புக்கொண்டா கூட் டணி ஓ.கே.ன்னு சொல்லலாம்னு இருந்தேன். அவர் எதுவும் பேசாம போயிட்டாருன்னு விஜயகாந்த் சொல்லியிருக்காரு.''  

""சேவை வரியை ரத்து செய்வது தொடர்பா நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்திப் பதுன்னு நடிகர்-நடிகைகள் நடத்திய உண்ணாவிரதத்தில் முடிவு  செய்யப்பட்டதே..? அதற்கான முயற்சிகள் எப்படி போய்க்கிட்டி ருக்குதாம்?''

""ப.சி. பற்றிய புத்தக விழாவில் ரஜினி கலந்துக்கிட்டது தெரியும். அதனால அவர் மூலமா சந்திப்புக் கான ஏற்பாடுகளை செய்யலாம்னு நினைச்சாங்க. ரஜினியோ, நடிகர் சங்கமே முயற்சி எடுக்கட்டும்னு சொல்லிட்டாராம். கராத்தே தியாக ராஜன் மூலமா ப.சி.யை சந்திக்க முயற்சிகள் நடக்குதாம். டெல்லி வட்டாரத்தில் விசாரித்தேன். ப.சி. யோ, சர்வீஸ் டேக்ஸை நான்தான் கொண்டு வந்தேன் என்பதுபோல குற்றம்சாட்டுறாங்க. பிரணாப் முகர்ஜி நிதியமைச்சரா இருந்தப்ப தான்  இதைப் போட்டாரு. இவங்க என் தலையை  உருட்டுறாங்கன்னு சொல்லுறாராம். பிரதமரின் கவ னத்திற்கு இதைக் கொண்டு போகா மல், நடிகர்களை சந்திப்பதோ, உறுதிமொழி  கொடுப்பதோ சரியா இருக்காதுங்கிறதால, பிரதமரோட அனுமதிக்காக காத்திருக்காராம் ப.சி.  நடிகர்களோ, ப.சி.யிடம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்தால் டெல்லி போய் சந்திப்போம். இல் லைன்னா, ஜெ.கிட்டே அப்பாயிண்ட் மெண்ட் வாங்கி சந்தித்து இந்த மேட்டரை அரசியலாக்குவோம்ங் கிற ப்ளானில் இருக்காங்க.''

""2ஜி விவகாரம் பூதாகரமா கிளம்புனப்ப பரபரப்பா பேசப்பட்ட நீரா ராடியா சம்பந்தமான தகவல் கள் மறுபடியும் அரசியலாக்கப் பட்டு இந்திய அளவில் ஒரு கலக்கு கலக்கும்னு டெல்லி வட்டாரத்தி லிருந்து தகவல் கசியுதே!''


""டாடா கம்பெனிக்காக 2ஜி உள்பட பல விஷயங்களுக்காக அரசாங்கத்தோடு மீடியேட் செய்த லையசன்தான் நீரா ராடியா. இந்த மீடியேட் வேலைக்காகவே அவர் தனியா ஒரு நிறுவனம் நடத்துறாரு. அதன் மூலமா பெரிய பெரிய நிறுவனங்களுக்காக மத்திய அரசாங்கத்தோடு  மீடியேட் பண்ணுவாருங்கிறதையும் துணிச்சலா-ஓப்பனா செயல்படுவாருங்கிறதையும், அவரவர்  எதிர்பார்ப்புகளுக் கேற்ப நடந்துக்கவும்  தயங்க மாட்டாருங்கிறதையும் நாம அப்பவே பேசியிருக்கோம்ங்க தலைவரே.''…

""ஆமாப்பா.. .. ஞாபகம் இருக்கு..''

""2ஜி விவகாரத்தப்ப, நீரா ராடியாவோட டெலிபோன் பேச்சுகளின் டேப்தான் பெரிய பரபரப்பை உண்டாக்குனுச்சி. இது தங்களோட கம்பெனி சம் பந்தப்பட்ட பர்சனல் விவகா ரம்னும் இதை வெளியிடக் கூடாதுன்னும் கோர்ட்டில் ஸ்டே வாங்கினார் ரத்தன் டாடா. இப்ப அந்த ஸ்டேவை சுப்ரீம் கோர்ட் நீக்கிடிச்சி. இது ஒன்றும் பர்சனல் இல்லைன் னும் சொல்லிடிச்சி. அதனால, நீரா ராடியா பல  கம்பெனி களுக்காக பேசிய போன் பேச்சு களின் டேப் விவகாரமும் வெளியாகும்ங்கிறதுதான் டெல்லி அரசியல் வட்டாரத்தில் அதிகமா இருக்குது. ராடியாவோட பேச்சுகளை டேப் செய்தது அமலாக்கத்துறைதான். அங்கிருந்துதான் இது லீக் ஆனது. எம்.பி. தேர்தல் நேரத்தில் இன்னும் எக்கச்சக்கமா லீக் ஆகும்னு டெல்லி எதிர்க்கட்சிகள் முகாமிலும்  மீடியாக்கள் வட்டாரத்திலும் பேசப்படுது.''

""அப்படின்னா நிறைய பேர் அம்பலப்படுவாங்களே.''…

""2ஜி மட்டுமில்லாமல், பல துறைகளிலும் பல டெண்டர்களுக்கு ராடியா லாபி பண்ணியிருக்கிறார் அது சம்பந்தமா அதிகாரிகள், எம்.பிக்கள், அமைச்சர்கள்னு பலர்கிட்டேயும் பேசியதெல்லாம் வெளியாகும்போது இந்தியாவே அதிரும்னு சொல்லப்படுது. பணம் போட்டது எடுத்தது மட்டுமில்லாமல் நீரா ராடியாவிடம் கொஞ்சலா, அந்தரங்கமா சில பேர் பேசியதும் லீக் ஆகலாமாம். இதை தெரிஞ்சுக்கிட்ட காங்கிரஸ் தரப்போ, ஆட்சிக்குத் தலைமை தாங்குறதால தங்கள் கட்சி ஆட்கள் சம்பந்தப்பட்ட போன் டேப்புகளை மட்டும் எடிட் செய்ய சொல்லிட்டதாகவும் தகவல் கசியுது. மற்ற கட்சி ஆட்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம் லீக் ஆகுமாம்.''

""தமிழக அரசியலில் எம்.பி. தேர்தல் நேரத்தில் புது பரபரப்பு கிளம்பும்னு சொல்லு.''…

""தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள் தெரிவிப்பதற்காக கோபாலபுரத்தில் கலைஞரை விடுதலைசிறுத்தைகள் திருமாவளவனும் ரவிக்குமா ரும் மற்ற நிர்வாகிகளும் சந்தித்தனர். அப்போது கலைஞரை திடீர் என்று சிலர் தெலுங்கர் என விமர்சிப்பது  பற்றி பேச்சு வர, கலைஞர் சிரித்துக்கொண்டே.. தெலுங்கும் திராவிடமொழிதான். திராவிட இயக்கத்தின் தலைவனாக நான் இருப்பதால் அப்படி சொல்லியிருப்பார்கள். என்னை ஆரியன் என்று விமர்சிக்க வில்லையே.. திராவிடக்கூறுகள் பற்றி அறியாதவர்களின் விமர்சனங்களுக்கு நாம் கவலைப்படவேண்டியதில்லை  என்றிருக்கிறார்.''

ad

ad