தமிழகத்திலிருந்து வந்த ஒரு புகாரைத் தொடர்ந்து அவருடைய செல்பேசி ஒட்டுக் கேட்கப்பட்டதுதான் ஆதிபராசக்தி கல்லூரிக்கு எம்.டிஎஸ். சீட்டுக்கான அனுமதி வழங்க 25 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கும்போது டாக்டர் முருகேசனை கையும் களவுமாக பிடிக்க முக்கியக் காரணம்’ என்று கண் சிமிட்டுகிறது லபக்கிய சி.பி.ஐ. டீம். அந்தப் புகாரில் அப்படி என்ன இருக்கிறது? என்று நாம் ஆராய்ந்தபோது, ‘"இனி பேச்சுலர் ஆஃப் டெண்டல் சர்ஜன், மாஸ்டர் ஆஃப் டெண்டல் சர்ஜன் படிக்க வேண்டுமென்றால் என்.இ.இ.டி. (சஹற்ண்ர்ய்ஹப் ஊப்ண்ஞ்ண்க்ஷண்ப்ண்ற்ஹ் ஊய்ற்ழ்ங்ய்ஸ்ரீங் பங்ள்ற்) நுழைவுத்தேர்வு எழுதவேண்டும் என்று மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவரப் போகிறது. இந்த நேஷனல் எலிஜிபிலிட்டி எண்ட்ரன்ஸ் டெஸ்ட் சிஸ்டத்தை.nskrtsn
(தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அதிக டொனேஷன்களை வாங்கிக்கொண்டு மாணவர் களுக்கு சீட் வழங்க முடியாது) தமிழகத்துக்கு அனுமதிக்காமல் ‘தவிர்க்க’ அரசியல் ரீதியில் தமிழக முதல் அமைச்சரை வைத்து முயற்சி செய் வோம். இதற்காக 450 கோடி ரூபாய் (அடேங் கப்பா...!) கொடுத்துவிடுங்கள்’ என்று தமிழ்நாடு டெண்டல் கவுன்சிலின் தலைவரும் அகில இந்திய பல் மருத்துவக் கழகமான டி.சி.ஐ-யின் தமிழக பிரதிநிதியுமான டாக்டர் குணசீலனும், டி.சி.ஐ- யின் உறுப்பினர் டாக்டர் முருகேசனும் தமிழ் நாட்டிலுள்ள 16 தனியார் பல் மருத்துவக் கல்லூரி முதலாளிகளிடம் பேரம் பேசி வருகிறார்கள்.
இதை முறைப்படி முடித்துக்கொடுப்பதாக அன் லிஸ்டட் மொபைல் ஃபோன் மூலம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய் பேசியிருக்கிறார். அவரது குரலும் அவர் பேசிய வார்த்தைகளும் அவருடைய ஒத்துழைப்போடு தான் இந்த நெட்வொர்க் இயங்கிக்கொண்டிருக் கிறது என்பதை உணர்த்துகிறது. தமிழக அரசின் ஆதரவுடன்தான் இந்த மெகா ஊழல் நடக்க இருக்கிறது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் இருக்கிறது'’என்பதுதான் அந்த புகாரில் உள்ள சாராம்சம்.
இந்தப் புகாரை டாக்டர் குணசீலன் மறுக்க... இந்த பரபரப்பு புகாரை அனுப்பியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் சொல்லப்படும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். யுனிவர்சிட்டியின் செனட் மெம்பரும் பிரபல பரசு பல் மருத்துவமனையின் எம்.டி.யுமான டாக்டர் யஸ்வந்த்குமார் வெங்கட் ராமனையே தொடர்புகொண்டு பேசியபோது, அவர் சொன்ன தகவல் இன்னும் அதிர்ச்சியடைய வைக்கிறது. “""சார்... எனக்கும் இந்தப் புகாருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமேயில்ல. டாக்டர் முரு கேசனுக்கு வேண்டாதவர்கள்தான் தங்களுடைய பெயரில் புகாரை அனுப்பினால் பிரச்சினையாகும் என்று என்னுடைய பெயரில் புகாரை அனுப்பி அவரை சிக்க வைத்திருக்கிறார்கள்''’என்று முடித்துகொண்டார் டாக்டர் யஸ்வந்த்.
"அப்படியென்றால் டாக்டர் யஸ்வந்த்குமார் வெங்கட்ராமன் பெயரில் சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பி டாக்டர் முருகேசனை சிக்கவைத்தது யார்? டாக்டர் முருகேசனுக்கும் டாக்டர் குணசீலனுக்கும் எப்படி நெருங்கிய நட்பு ஏற் பட்டது? தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்யின் பெயரில் எப்படி லஞ்சம் வாங்கி குவித்தார்கள்?' என்று பல் மருத்துவ வட்டாரத்தில் தோண்ட தொடங்கினோம்.
""டாக்டர் முருகேசனின் சொந்த ஊர் மதுரை. சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிந்து பதவியை ரிசைன் பண்ணிவிட்டு தற்போது, எஸ்.ஆர்.எம். கல்லூரியில் டீனாக வந்ததே அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துதான். அதுமட்டுமல்ல, எஸ்.ஆர். எம். கல்லூரியில் ஜாயின்ட் பண்ணும்போதே கேரள திருவனந்தபுரத்திலுள்ள நூரில் இஸ்லாம் என்ற கல்லூரியில் பணிபுரிந்ததாக தவறான எக்ஸ்பீரியன்ஸ் சர்டிஃபிகேட்டை காண்பித்துதான் ஜாயின்ட் பண்ணியிருக்கிறார். "இவர் டி.சி.ஐ.-யின் உறுப்பினரானதே இல்லீகல்' என்று தீர்ப்பளித் துள்ளார் நீதியரசர் சந்துரு.
டி.சி.ஐ-யின் முன்னாள் பிரசிடெண்ட் அனில் கோலி மீது பல வழக்குகளை தொடர்ந்தவர்கள் இந்த முருகேசனும் டாக்டர் குணசீலனும்தான். அனில்கோலி மீது போடப்பட்ட வழக்குகள் சரியாக நிரூபிக்கப் படவில்லை என்றாலும் அவரே இந்தப் பதவியை ரிசைன் பண்ணிவிட் டார். அதற்குப் பிறகு தான் டாக்டர் முரு கேசனின் நெருங்கிய கூட்டாளியான திபேந்து மசூம்தார் டி.சி.ஐ.யின் தலைவ ரானார்''’என்றவர்கள் இதன் பின்னணி களைச் சொல்ல... ஹார்ட் பீட் எகிற ஆரம்பித்தது.
சரியான வசதிகள் இல்லை என்று ஆசான் மெமோரியல் டெண்டல் காலேஜ் ஆரம்பிக்கவே அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இவர்கள் வந்ததும் அனுமதி கொடுக்கப்பட்டது. இப்படி சரியான ஃபெஸிலிட்டிஸ் இல்லாமல் கட்டப் படுகின்ற கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதால் அரைகுறை டாக்டர்கள்தான் உருவாகி மக்களுக்கு பாதிப்பை உண்டாக்குவார்கள். அதுவும், டாக்டர் முருகேசன் ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக ரேட்டு போட்டு கூவியழைக்காத குறையாய் காரியங்களை முடித்துகொடுக்க ஆரம்பித்ததால் தான் சிக்கிக்கொண்டார்.
தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளிடம் நடத்திய பேரத்தில் 450 கோடி ரூபாய் என்பது நம்ப முடியாததாக இருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய அதில் பாதி தொகையையாது பேரம் பேசியிருப்பார்கள். (நான்கு பி.எம்.டபுள்.யூ. கார் வைத்திருக்கிறார் டாக்டர் முருகேசன். அரசியலில் இறங்கும் ஆசையும் அவருக்கு உண்டு. மனைவி பிரிந்து இன்னொரு முஸ்லிம் பெண்ணோடுதான் வாழ்ந்து வரு கிறாராம்)
தமிழ்நாடு பல் மருத்துவக் கவுன்சிலின் தேர்தல் 2012 ஏப்ரல்-9 ந்தேதி நடந்தது. சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் டாக்டர் நாசர் தலைவர் பதவிக்கு போட்டியிட.... சுகாதாரத்துறை அமைச்சர் என் பாக்கெட்டுக்குள் என்று சொல்லிவரும் டாக்டர் முருகேசன் அனைத்து டாக்டர்களையும் மிரட்டி டாக்டர் குணசீலனை நிற்கவைத்து... அடாவடியாக ஜெயிக்கவைத்தார். ஒரு எம்.டி.எஸ். சீட்டு அனுமதி வழங்குவதற்கு மட்டுமே குறைந்த பட்சம் 10 லட்சம் பேரம் பேசிவிடுவார்கள். மாணவர்களிடம் ஒரு சீட்டுக்கு 40 லட்சம் வரை டொனேஷனாக கல்லூரிகள் வசூலித்துவிடும். கடந்த வருடம் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் மயில்வாகனன் நடராஜன், "இனி இந்த தனியார் கல்லூரிகள் நடத்தும் கூட்டுத் தேர்வை அரசே நடத்தி பி.ஜி.சீட்டுகளை மாணவர்களுக்கு வழங்கும்' என்று உத்தரவிட்டார். இதனால், யார் அதிக டொனேஷன்களை கொடுக்கிறார்களோ அந்த மாணவர்களுக்கு பி.ஜி. சீட்டுகளை வழங்கிக் கொண்டிருந்த தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் அதிர்ச்சியில் உறைந்துபோய் டாக்டர் முருகேசனை சந்தித்து புலம்ப... "அமைச்சர் விஜய்யிடம் பேசி நான் பார்த்துக்கொள்கிறேன், கொடுக்கவேண்டியதை மட்டும் கொடுத்து விடுங்கள்' என்று பேரம் பேச... லட்சக்கணக்கில் கைமாறியும் வேலையை முடிக்காமல் தனியார் கல்லூரி முதலாளிகளை கலங்கவைத்துவிட்டாராம் டாக்டர் முருகேசன்.
2011 வரை தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் எம்.டி.எஸ். மொத்த சீட்டுகளே 1,200 ஆகத்தான் இருந்தது. ஆனா, மசூம்தாரும் , முருகேசனும் பொறுப்பேற்றதுமே ஒரு வருடத்துல 1,187 சீட் இன்கிரீஸ்பண்ணி 2387 சீட்டாக்கிட்டாங்க. இதில் பலகோடிகள் விளையாடுவதாக டி.சி.ஐ. முன் னாள் உறுப்பினர் டாக்டர் ஷாஜி ஜோசப் வழக்குத் தொடுத்துள்ளார். இதுவும் அதிக டவுட்டை உண்டாக்கியது சி.பி.ஐ.க்கு. எந்த அளவுக்கு சீட்டுகளை இன்கிரீஸ் பண்றாங்களோ அந்தளவுக்கு பணம். டாக்டர் முருகேசனுக்கு பல் மருத்துவம் என்பது 10 சதவீதம்தான். ஆனால் இதில், தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளிடம் பேரம் பேசி இப்படி புரோக்கராக செயல்பட்டு பணம் சம்பாதிப்பதுதான் 90 சதவீத வேலை''’என்றவர்களிடம்...
"அப்படியென்றால் டாக்டர் முருகேசனுக்கு எதிராக சி.பி.ஐயிடம் புகார் கொடுத்தது யாராக இருக்கும்?' என்று கேட்டபோது... ""டி.சி.ஐ.யின் முன்னாள் உறுப்பினரான கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஜோசப் ஐசக் என்பவர் "எந்தெந்த கல்லூரி யெல்லாம் லஞ்சம் கொடுக்கவில்லையோ அந்த கல்லூரிகளுக்கு டாக்டர் முரு கேசனை இன்ஸ்பெக்ஷனுக்கு அனுப்பி பேரம் பேசுகிறார் டி.சி.ஐ. தலைவர் திபெந்து மசூம்தார்' என்று கடந்த 2012 ஜூன் மாதம் வழக்கே தொடர்ந்துள்ளார். இப்படி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடி கோடியாய் பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் மருத்துவத்துறையிலும் எதிரிகளை சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார் முருகேசன். அதனால், இவருக்கு எதிர் டீமில் உள்ளவர்களோ அல்லது இவரின் டார்ச்சரால் பாதிக்கப்பட்ட தனியார் கல்லூரியோ தான் இவரைப் பற்றிய புகாரை டாக்டர் யஸ்வந்த் குமார் வெங்கட்ராமன் பெயரில் அனுப்பி வெச்சிருப்பாங்க''’என்கிறார்கள் விவரமாக.
சி.பி.ஐ. பிடியில் சிக்கியிருக்கும் திமிங்கலத்தின் வாயிலிருந்து இன்னும் என்னென்ன வெளிவரப் போகுதோ? தங்களது தவறை மறைக்க டி.சி.ஐ.க்கு லஞ்சத்தை கொடுக்கும் தனியார் கல்லூரிகள்.... மாணவர்களிடமிருந்து மனிதாபிமானம் இல்லாமல் ஃபீஸை பிடுங்குகிறது. கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டிய மாணவர்கள் மருத்துவர்களாக வந்து அதிக ஃபீஸை நம்மிடம் பிடுங்காமல் மனிதாபிமானத் தோடு இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?