புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2013

இறைவா!  இந்தக் கொடுமையை யாரிடம் போய்ச் 
சொல்லவொம்.தமிழ்நாட்டு அகதி முகாம்களில்
ஈழத் தமிமிழிச்சிகளுக்கு நடக்கும் கொடுமை! கொடுமை! 
கொடுமை! பல வருடங்களாய் பலமுறை 
சுட்டிக்காட்டிய போதும் கண்டு கொள்ளாத தமிழக அரசியல் சக்திகள்.
----------------------------------------------------------------------------
இலங்கை தமிழ் அகதிகள் முகாமில் வசிக்கும் பெண்களை கியூ பிராஞ்ச் போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்துகின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்து, சாதாரண முகாம்களில் உள்ள தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்கக் கோரி ஈழத்தமிழ் சொந்தங்கள் 9 பேர் 24 நாட்களாக பட்டினிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். முகாம்களில் வாழும் பெண்களை புணர்ச்சிக்கு அழைப்பது, அவர்கள் எதிர்க்கும்போது, உங்கள் அண்ணன், தம்பிகளை சிறப்பு முகாம்களில் அடைத்து விடுவோம் என்று மிரட்டுவது என்று கியூ பிரிவினரின் அராஜக நடவடிக்கைகள் இருக்கின்றன. இதுபோன்ற காரணத்தினால்தான் நாங்கள் கடலில் செத்தாலும் பரவாயில்லை என்று  வேறு நாடுகளுக்கு தப்பி செல்கிறோம் என்று நம் சொந்தங்கள் கூறுவதை கேட்க வருத்தமாகவும், வெட்கமாகவும் இருக்கிறது.

 அவ்வப்போது 4 பேர், 5 பேர் என்று விடுதலை செய்யப்படுகிறார்கள். அடுத்த சில நாட்களிலேயே மேலும் சில ஈழத்தமிழ் மக்களை, குறிப்பாக இளையோரை பிடித்துக் கொண்டு வந்து சிறப்பு முகாம்களில் அடைத்து விடுகின்றனர். எனவே தமிழக முதல்வர் மனிதாபிமான நோக்கோடு இதில் தலையிட்டு, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அயல் நாட்டவர் சட்டத்தினை ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு எதிராக எப்படி கியூ பிரிவு தவறாக பயன்படுத்தி வருகிறது என்பதை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி அறிந்துகொள்ள வேண்டும். 

முதல்வர், கியூ பிரிவினரின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது. இதற்கு விடிவு பிறக்க வில்லையெனில், கடுமையான ஒரு போராட்டத்தில் குதிப்பதைத் தவிர நாம் தமிழர் கட்சிக்கு வேறு வழியில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்."என்று அந்த அறிக்கையில் சீமான் கூறியுள்ளார்.

ad

ad