திடுக்கிடும் செய்தி: எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்தவின் அரசாங்கத்தில் ஆலோசகர் பதவி !
உலகத் தமிழர் பேரவையின்(GTF) முன் நாள் தலைவராக இருந்தவருமான நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்திற்கு மகிந்த பதவிகொடுத்துள்ளார். நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் நீண்ட நாட்களாக பல புலம்பெயர் அமைப்புகளில் ஊடுருவி செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். அதுமட்டுமல்லாது இவரது
மகன் அருச்சுனா எதிர்வீரசிங்கமும், லண்டனில் இருந்து பல தமிழ் அமைப்புகளில் செய்ல்பட்டு வந்தவர். இவர் லண்டனில் இயங்கிவந்த ரி.ஆர்.ஓ அமைப்பின் பொறுப்பாளர், ரெஜி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதும், வணங்கா மண் கப்பல், இலங்கைக்கு அனுப்பப்படும் பொழுதில், இவர் அதற்காக வேலை செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையங்கள் ஆகும்.
யார் இந்த எதிர்வீரசிங்கம் ?
1952ஆம், 1956ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளிலும் 1959ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இலங்கை அணியின் தடகள வீரராகக் கலந்து கொண்ட எதிர்வீரசிங்கம் பின்னர் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக தமிழ் மக்களிடையே வெளிப்பாட்டார். கே.பியின் தலைமையில் அனைத்துலக செயலகம் இயங்கிய 1990களில் இவரையும், உருத்திரகுமாரனையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பின்கதவுத் தொடர்பாளர்களாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு பயன்படுத்தி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
சிங்களப் பெண் ஒருவரை மணம்முடித்த இவரது மகன் அர்ஜுன் ஓரிரு மாதங்களில் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முக்கிய பிரமுகராக உயர்ந்ததோடு, கொழு