சிங்கள அரசின் இணையத்தளங்கள் மீது தொடர் தாக்குதல் !
கேம் ஓவர்’ என்ற குறியீட்டுப் பெயருடன் கடந்த வாரம் இணையவழித் தாக்குதலாளி ஒருவர் நிகழ்த்திய தாக்குதலில் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் இணையத்தளம் துடைத்தழிக்கப்பட்டது. . இத்தாக்குதல் நிகழ்ந்த சில மணிநேரங்களில் ‘டவ்வி ஜோன்ஸ்’ என்ற குறியீட்டுப் பெயருடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் இணையத்தளம் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
ரூபவாகினி மீது தாக்குதல் நடத்திய, தாக்குதல்காரர்கள் அந்த இணையத்தில் சேமிப்பில் இருந்த பல வீடியோக்களை திருடிச் சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. 2009ம் ஆண்டு போர் இடம்பெற்றவேளை கொடூரமான போர் காட்சியகள் அடங்கிய பல வீடியோகள் ரூபாவாகினியிடம் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இதனைக் குறிவைத்து தான் தாக்குதல் நடைபெற்றதா என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
ஆதாரம்: http://www.zdnet.com/sri-lanka-govt-web-sites-hit-in-spate-of-attacks-7000010162/