புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஜன., 2013

 ராகுல்காந்தியை காங்கிரஸ் கட்சியோட வாரிசாக முறைப்படி அறிவிச்சிட்டாங்க.''
""அவரைத் துணைத் தலைவர் ஆக்குவதற்காகத்தான் ஜெய்ப்பூர் மாநாட்டையே காங்கிரஸ் கட்சி நடத்துனுச்சின்னு டெல்லி சோர்ஸ்கள் சொல்லுதே.''…


""ஆமாங்க தலைவரே.. எனக்கும் அந்தத் தகவலைச்  சொன்னாங்க. ஜெய்ப்பூர் கிளம்புறதுக்கு முன்னாடியே காங்கிரஸ் கட்சியின் சீனியர் நிர்வாகிகளுக்கு மேலிடத்திலிருந்து போன் செய்து, ராகுல்காந்திக்குப் பொறுப்பு கொடுக்கணும்னு மாநாட்டில் பேசுங்கன்னு சொல்லப்பட்டதாம். அதுவும் கட்சி, ஆட்சி இரண்டிலும் பொறுப்பு கொடுக்கணும்னு பேசணுமாம். தலைமையின் உத்தரவுப்படி, ஜெய்ப்பூரில் காங்கிரஸ் சீனியர்கள்  பொளந்து கட்டிட்டாங்க. திட்டமிட்டபடியே, காங்கிரசின் துணைத்தலைவ ராயிட்டாரு ராகுல்காந்தி.''

""புதுப்பதவி கிடைத்ததும் ராகுலின் குரல் ரொம்ப சென்ட்டி மென்ட்டா ஒலித்திருக்குதே…!''

""அவர் ரொம்ப நெகிழ்ந்திருந்ததா, ஜெய்ப்பூர் மாநாட்டுக்குப் போன நம்ம மாநிலத்து கதர்ச்சட்டைக்காரங்க சொல்றாங்க. தன்னோட பாட்டி இந்திராகாந்தியை அவரோட பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதையும், அந்தப் பாதுகாவலர்களோடு அதற்கு முதல்நாள் வரைக்கும் இவர் விளையாடிக்கிட்டிருந்ததையும் திடீர்னு தன் பாட்டி கொல்லப்பட்டதையும் ரொம்ப உருக்கமா சொன்ன ராகுல், தன் அப்பா ராஜீவையும் அரசியல் களத்தில் பறிகொடுத்தது பற்றியும் பேசினாரு. காங்கிரஸ் மாநாட்டில் தன்னை துணைத் தலைவரா அறிவிக்க சோனியா சம்மதித்தாலும், ஒரு தாயாக அன்றிரவு அவர் தூங்காமல், அரசியல் வாழ்வு எந்த முடிவுக்கும் கொண்டு செல்லும்ங்கிற கலக்கத்தோடு அழுததை யும் ரொம்ப சென்ட்டிமென்ட்டா ராகுல்காந்தி பேசினாரு.''

""புதிய இளைஞர்களைக் காங்கிரஸ் பக்கம் ஈர்க்கணும்ங்கிறதில் ராகுல்காந்தி தீவிரமா இருக்காரு போலிருக்குதே..''

""அதுவும் அவரோட பேச்சில் எதிரொலிச்சது. புது இளைஞர்களைக் காங்கிரஸ் பக்கம் ஈர்க்கணும்னா, கட்சிப் பொறுப்புகளில் இளைஞர்களை அதிகளவில் ஈடுபடுத்தி அதிகாரத்தைப் பரவலாக்கணும்ங்கிறதுதான் ராகுலோட பாலிசி. எம்.பி. தேர்தலில் காங்கிரசின் பிரதமர் வேட்பாளரா ராகுல்காந்தியைத்தான் மேலிடம் முன்னிறுத்தப் போகுது. அதுவும் க்ளியர் ஆயிடிச்சி.''

""தமிழக காங்கிரஸ்காரங்க என்ன நினைக்கிறாங்க?''

""ராகுலை முன்னிறுத்துவதால தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும்னு தெரியாம அவங்க குழப்பத்துல இருக்காங்க. ஏன்னா, காங்கிரஸ் பொதுச்செயலாளரா இருந்தப்பவே, தமிழ்நாட்டுக்கு வந்தப்ப கூட்டணிக் கட்சித் தலைவரான கலைஞரை ராகுல் ஒருமுறை கூட சந்திச்சிப் பேசுனதில்லை. இப்ப துணைத் தலைவர் ஆயிட்டாரு. அதோடு, எம்.பி தேர்த லுக்கான காங்கிரஸ் கட்சியின் கமிட்டியிலும் அவர்தான் பிரதானமா இருக்காரு. கூட்டணி பற்றி என்ன முடிவெடுக்கப்போறாருன்னு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் புரி யாமல்தான் இருக்காங்க.''

""ஜெய்ப்பூரிலிருந்து அப்படியே பெங்களூருக்கு வாப்பா.. .. சொத்துக் குவிப்பு வழக்கு ஸ்பீடு எடுக்கிற நேரத்தில், திடீர்த் திருப்பம் ஏற்பட்டி ருக்கே.''…

""கார்டன் வட்டாரம்  ரொம்ப சந்தோசமா இருக்குங்க தலைவரே.. 21-ந் தேதி வழக்கு விசாரணை ஆரம்பிச்சப்ப, குற்றம்சாட்டப்பட்டவங்க தரப்பில் நான்கு சாட்சி விசாரணையை விசா ரிக்க ரெடியா இருந்தாங்க. ஜெ. சார்பில் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட் டது. அதாவது, 1994-95ல் இன்கம் டாக்ஸ் கணக்கை அசிஸ்டெண்ட் கமிஷனர் பிரேம் ராஜா தப்பா அசெஸ் பண்ணிட்டா ருன்னும், அது சம்பந்தமான ஒரிஜினல் டாக்குமென்ட்ஸை புரடியூஸ் பண்ணுவ தோடு, பிரேம்ராஜாகிட்டே விசாரணை யும் நடத்தணும்ங்கிறதுக்காகத்தான்   அந்த மனு.''

""கோர்ட் ஏற்றுக்கொண்டதா?''

""அப்படி  விசாரிக்கணும்னா, அவர்கள் வந்துபோகும் செலவுத்தொகை 8000 ரூபாயை, மனுதாரர் தரப்பு ஏற்றுக்கொள்ளணும். அதுபற்றி நீதிபதி கேட்டார். ஜெ. தரப்பு வக்கீல்கள் இது சம்பந்தமா கோர்ட் வளாகத்தில் நின்று போன் போட்டு பேசிவிட்டு, சரின்னு சொன்னாங்க. கோர்ட்டும் ஏற்றுக்கொண்டுவிட்டது. விசாரணை தொடர்ந்து நடக்கவேண்டிய நிலையிலே, அரசுத் தரப்பு வழக்கறிஞரான சந்தேஷ் சவுடா, என்னால இந்த வழக்கில் ஆஜராகி வாதாட முடியாதுன்னு சொன் னதுதான், பெரிய டர்னிங் பாயிண்ட் ஆயிடிச்சி.''

""வழக்கு விவரங்களை முழுசா தெரிஞ்சவ ராச்சே அவரு.. ஏன் அப்படி சொன்னாராம்?''

""அரசு வழக்கறிஞரா நியமிக்கப்பட்டிருந்த ஆச்சார்யா ராஜினாமா லெட்டர் கொடுத்துட்டு ஒதுங்கியதாலதான், அவரோட ஜூனியரான சந்தேஷ் சவுடா தொடர்ந்து வாதாடிக்கிட்டிருந் தாரு. இன்று காலை ஆச்சார்யாவோட ராஜினாமாவை ஏற்றுக்கிட்டு அரசு ஜி.ஓ. போட்டதால, அவரோட ஜூனியரான தானும் வாதாட முடியாதுன்னு சொல்லிட்டாரு. நீதிபதியோ, புதுசா அரசு வக்கீலை நியமிக்கிற வரைக்கும் நீங்களே வாதாடலாமேன்னு சொல்லியும் சவுடா வாதாட மறுத்துட்டாரு. அதனால பிப்ரவரி 4-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருக்கு.''

""அப்படின்னா இனி  கேஸின் போக்கு எப்படி இருக்குமாம்?''

""புது அரசு வக்கீலை கர்நாடக அரசும் ஹைகோர்ட்டும் சேர்ந்து நியமிக்கணும். சவுடாவுக்கு கேஸ் விவரம் முழுமையா தெரியும். அதோடு, சீனியாரிட்டியும் இருக்குது. அவரையே நியமனம் செய்யலாம். புதுசா ஒருத்தரை நியமிச்சா, வழக்கு விவரத்தையெல்லாம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்தான் விளக்கிச் சொல்லணும். அவர்கள் சொல்வார்களா?.''

""என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.''… …

""நிறைய ஏரியாக்களில் என்ன நடக்குதுன்னு பார்க்க வேண்டியிருக்குங்க தலைவரே.. கொட நாட்டிலிருந்து திரும்பிவரும்போது, தே.மு.தி.க. விலிருந்து 6 எம்.எல்.ஏ.க்களை வெளியே கொண்டு வந்தாகணும்னு அ.தி.மு.க அமைச்சர்களுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கு. ஏற்கனவே 4 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி வளர்ச்சிக்காக ஜெ.வை சந்திச்சாங்க. கொடநாட்டிலிருந்து ரிட்டன் ஆனதும் இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் சந்திச்சாகணும்ங்கிறதில் ஓ.பி.எஸ் தலைமையிலான டீம் ரொம்ப தீவிரமா வேலை செய்துகிட்டிருக்கு. எதற்காக இந்த இழுப்பு வேலைகள்னு கேட்டால், அ.தி.மு.க வட்டாரத்தில் ஒரு கணக்கு சொல்றாங்க.''

""என்ன கணக்கு?''

""வரும் ஜூலை 24-ந் தேதியோடு தமிழகத்தை  சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களோட பதவிக் காலம் முடிவடையுது. அ.தி.மு.க இளவரசன், மைத்ரேயன், தி.மு.க கனிமொழி, திருச்சி சிவா, காங்கிரஸ் ஞானதேசிகன், சி.பி.ஐ. டி.ராஜா இந்த 6 பேருக்கும் பதவி முடியுது. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு தமிழக சட்டமன்றத்தில் 33 எம்.எல் ஏ.க்களோட ஓட்டு வேணும். இப்ப இருக்கிற பலத்தின்படி, அ.தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்கள் கிடைப்பாங்க. மிச்சமிருக்கிற எம்.எல்.ஏ.க் களையும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவையும் வச்சி மீதி 2 எம்.பி.யில் ஒன்று கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கிடைக்குமாம்.''

""எந்த கம்யூனிஸ்ட்? சி.பி.எம்.மா, சி.பி.ஐ.யா?''

""சி.பி.ஐ டி.ராஜா பதவி முடிவதால, அந்தக் கட்சிக்கு இப்ப கொடுத்துட்டு, 2014-ல் சி.பி.எம். டி.கே.ரங்கராஜனுக்கு பதவி முடிவடைவதால் அப்ப சி.பி.எம். வாங்கிக்கலாம்னு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே பேச்சு நடந் திருக்கு. இருதரப்பு தோழர்களின் தலைமையும் சரின்னு சொல்லியிருக்குதாம். சி.பி.ஐ. தலை மையைப் பொறுத்தவரை மீண்டும் டி.ராஜா வுக்கே தர ஆசைப்படுது. ஆனா, அ.தி.மு.க. ஆதரவில் கிடைக்கும் இந்த எம்.பி பதவியை அடைய தா.பாண்டியன் ரொம்பத் தீவிரமா இருக்காரு.'' 


""சரி இந்த எம்.பி. சீட்டுக்கும் தே.மு.தி.க எம்.எல்.ஏ.க்களை இழுக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?''

""மிச்சம் ஒரு சீட்டு இருக்குதுல்ல.. அதை தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி போட்டு எடுப்பதில் குழப்பம் வரலாம்னு அ.தி.மு.க தலைமை நினைப்பதால், தே.மு.தி.க.வின் 6 எம்.எல்.ஏ.க்களை டார்கெட் பண்ணியிருக்காங்க.''

""யார் யார் பலியாடுகளோ!''

""தி.மு.க தரப்பு செய்தி ஒன்று நான் சொல்றேன்.. அழகிரி மீண்டும் கலைஞரை சந்திக்கும் எண்ணத்துடன் 21-ந் தேதியன்னைக்கு மதுரையி லிருந்து சென்னைக்கு காரில் வந்தார். மதுரையில் அவரோட பிறந்தநாள் ஏற்பாடுகள் எதுவும் நடக்கலை. ஸ்டாலினை கலைஞர் முன்மொழிவதா சொன்னதிலிருந்து அழகிரி தரப்பில் குழப்பம் நிலவுது. அதை யெல்லாம் சீராக்கி, பிறந்தநாள் விழாவுக்கு மதுரைக்கு கலைஞரைக் கூப்பிடணும்ங்கிறதுக்காகத் தான் சென்னை விசிட். குடும்பத்தினரோடு தீவிரமா ஆலோசனை நடத்தியிருக்கிறார் அழகிரி.'' 

படங்கள் : ஸ்டாலின்

ad

ad