புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013


பர்மியர்களில் 100 பேர் வரை நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டனர்! - உயிர்தப்பியோர் தெரிவிப்பு
இலங்கையின் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ள பர்மிய நாட்டவர்கள், தம்முடன் பயணித்தவர்களில் மேலும் 100 பேர் வரையில் நடுக்கடலிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
கிழக்குக் கரையிலிருந்து சுமார் 250 கடல் மைல்கள் தொலைவில் படகொன்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 32 பேர் இலங்கைக் கடற்படையினரால் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டனர்.
இவர்களுடன் குறித்த படகில் பயணித்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றி நடுக்கடலிலேயே உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் கடலில் வீசப்பட்டு விட்டதாக உயிர்தப்பிய பர்மிய நாட்டவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்களை சந்தித்து கலந்துரையாடிய காலி மாளிகாவில பௌத்த பிக்கு அஸ்ஸஜி தேரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
காலி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட 32 பேரும் அவர்களின் உடல்நிலை காரணமாக கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2ம் இணைப்பு
மட்டக்களப்பு கடற்பரப்பிலிருந்து 225 கிலோ மீற்றர் கடல் மைல் தொலைவில் நேற்று மீட்கப்பட்ட 38 வெளிநாட்டவர்களும் காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் வழிதவறி தத்தளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டவர்கள் 38 பேர் இலங்கை கடற்படையினரின் 'சாகர" கப்பலால் நேற்று மாலை மீட்கப்பட்டனர்.
இவர்கள் சில நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் கடலில் தத்தளித்ததால் நோய் தன்மைகளை எதிர்நோக்கிய நிலையில் மீட்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்திருந்தார்.
குறித்த மியன்மார் பிரஜைகள் இன்று முற்பகல் 10 மணியளவில் அழைத்து வரப்பட்டு, தற்போது காலி கராப்பிட்டிய மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கவலைக்கிடமான நிலையில் இருந்தவர்களின் உடல் நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சந்திம சிறிதுங்க தெரிவித்தார்.
குறித்த மியன்மார் பிரஜைகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 3 படகுகளில் 130 பேர் வரை அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் பயணித்துள்ளனர்.
இதன்போது, இரண்டு படகுகள் விபத்துக்குள்ளாகியுள்ளன. எஞ்சியவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர்.
குறித்த மியன்மார் பிரஜைகளை மாளிகாவில அஸ்ஸஜீ என்ற பௌத்த மதகுரு அழைத்துச் சென்றுள்ள நிலையில், அவர் மியன்மார் மொழிப் பெயர்ப்பாளராகவும் செயற்படுகிறார்.
நீண்ட காலமாக மியன்மாரில் வசித்து தற்போது காலியில் உள்ள பௌத்த மத பீடத்தில் அவர் வசித்து வருகிறார்.
மியன்மார் தூதரகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மொழிப்பெயர்ப்பாளராக செயற்படுகிறார்.
மியன்மார் பிரஜைகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தம்முடன் வந்த 98 பேர் உணவு, குடிநீர் இன்றில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.

ad

ad