புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2013

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தவேண்டும்: வைகோ பேச்சு
---------------------------------------
திருச்சி, பிப். 18- 
 
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் சாதி மத நல்லிணக்க மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. காந்திய மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், `சாதிகள் இல்லையடா தமிழா' என்ற தலைப்பில் பேசினார். திருச்சி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு கலியமூர்த்தி வாழ்த்தி பேசினார். சிறப்பு அழைப்பாளராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு,பேசியதாவது:-
 
ஈழ மக்களை காக்க தமிழ் சமுதாயம் தவறி விட்டது. 7 கோடி தமிழர்கள் இருந்தும் இந்த இனம் அழிக்கப்பட்டபோது, பார்த்து கொண்டு இருந்துவிட்டோம். தனித்தமிழ் ஈழம் தான் அங்குள்ள தமிழனுக்கு ஒரே தீர்வு. இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு சர்வ தேச விசாரணை தேவை என்று மனித உரிமை ஆணையர் கூறி இருக்கிறார். நடந்தது போர் குற்றம் அல்ல.
 
திட்டமிட்ட இனப்படுகொலை. 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவில் கடற்படை இல்லையா? இந்திய அரசின் உதவியால் தான் இலங்கை போரில் வெற்றி பெற முடிந்தது என்று ராஜபக்சே கூறுகிறார்.
 
இந்தியா இதுவரை செய்த குற்றத்துக்கு பரிகாரம் செய்ய ஒரு வாய்ப்பாக, இலங்கை அரசு மீது மனித உரிமை ஆணையம் கொண்டு வந்த குற்றச்சாட்டை மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு ஏற்குமா? இலங்கை இனப்படுகொலை குறித்த சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்.
 
இவ்வாறு அவர் பேசினார்.
 
மாநாட்டில் தமிழருவி மணியன் பேசியதாவது:- 2016ம் ஆண்டில் தமிழக முதல்-அமைச்சராக வைகோவை நான் முன் மொழிகிறேன். இதனை ஒட்டு மொத்த தமிழகமும் வழிமொழியும் என்று நம்புகிறேன். பெரியார் வாழ்ந்த மண்ணில் சாதியை மையமாக வைத்து ஒரு மோசமான சூழல் வளர்ந்து வருகிறது.
 
டாக்டர் ராமதாஸ் வன்னிய சாதிக்காக வாழ்வை அர்ப்பணித்து இருப்பது தான் அவருடைய அரசியல் வீழ்ச்சிக்கு காரணம். சாதியை வைத்துதான் முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்றால், கருணாநிதி 5 முறை முதல்அமைச்சர் ஆகி இருக்க முடியுமா? சாதி உணர்வை தூண்டி அரசியல் செய்பவர்கள் எந்த  சாதியில் இருந்தாலும் அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். சாதி மதங்களை மீறி மனிதம் தழைக்க நாம் பாடுபடுவோம்.
 
ad

ad