புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2013


சுவிட்சர்லாந்து லுசேன் மாநிலத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 7பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
மெஸ்னா என்ற இடத்தில் உள்ள மர தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 9மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

42வயதுடைய அந்நபர் ஆலைக்குள் நுழைந்து தேனீர்சாலையில் இருந்தவர்கள் மீதும் தொழில்சாலையில் இருந்தவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார்;. இவர் அத்தொழிற்சாலையின் ஊழியர் என்றும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை செய்த நபர் பின்னர் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த சமயம் அத்தொழிற்சாலையில் சுமார் 100ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.  துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அத்தொழிற்சாலையில் 10வருடங்களாக வேலை செய்து வந்தார் என்றும் வேலை செய்த காலத்தில் வன்முறை குணம் கொண்டவராக அவர் காணப்படவில்லை என அத்தொழிற்சாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஒஸ்ரியா நாட்டின் மரத்தொழிற்சாலை நிறுவனம் ஒன்றின் கிளை நிறுவனமாக இத்தொழிற்சாலை இயங்கி வந்தது. துப்பாக்கி சூட்டு சம்பவம் நடந்த தொழிற்சாலையில் 400தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர் பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.thinakkathir.com/?p=48446#sthash.WZofvPKG.dpuf

ad

ad