புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 பிப்., 2013

680 கால்பந்து போட்டியில் மேட்ச் பிக்சிங்: சூதாட்டத்தை நடத்தியவர் சிங்கப்பூர் தமிழர்
உலகம் முழுவதும் அதிகம் பேர் பார்க்கும் விளையாட்டாக கால்பந்து போட்டி உள்ளது. விறுவிறுப்பாக நடைபெறும் இந்த போட்டிக்கு கோடிக் கணக்காண ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் கால் பந்து போட்டிகளில்
நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நான்கு கண்டங்களில் நடந்த கால்பந்து போட்டிகளில் `மேட்ச் பிக்சிங்' நடந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. மொத்தம் 680 ஆட்டத்தில் சூதாட்டம் நடந்துள்ளது. 

உலக கோப்பை கால்பந்து,  ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிகளின் தகுதி சுற்று மற்றும் கிளப் போட்டிகளில் இந்த சூதாட்டம் நடந்தது தெரிய வந்தது. இந்த கால்பந்து சூதாட்டத்திற்கு சூத்திர தாரியாக இருந்து சிங்கப்பூரை சேர்ந்த தமிழர் ஆவார். அவரது பெயர் வில்சன்ராஜ் பெருமாள். 47 வயதான அவர் என்ஜினீயராக உள்ளார். 

பெருமாள் தலைமையிலான குழு ஐரோப்பிய சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு மிகப்பெரிய `மேட்ச் பிக்சிங்'ல் ஈடுபட்டுள்ளது. அவரது இன்டெர்நெட் மற்றும் ஈமெயில் ஆய்வு மூலம் சூதாட்டம் பற்றிய பல்வேறு தகவல் கிடைத்தது. இதன் மூலம் அவர் கோடி கணக்கில் பணம் சம்பாதித்ததும் தெரிய வந்தது. கால் பந்து சூதாட்டம் தொடர்பாக இது வரை 50 பேர் கைதாகியுள்ளனர்.

ad

ad