""ஹலோ தலைவரே... ஜெ.வின் 65வது பிறந்தநாளை பிப்ரவரி 24-ந் தேதி தமிழ்நாடு முழுக்க அமர்க்களப்படுத்தணும்னு ரகசிய உத்தரவாம். அதை நிறைவேற்று வதற்காக மந்திரிகளும் மா.செ.க்களும் படுபிஸியா வேலை பார்த் துக்கிட்டிருக்காங்க.''nakeeran
""வசூலும் கனஜோரா நடக்குதாமே.''…
""ஒவ்வொரு அமைச்சரும் பல சி-க்களை செல வழிச்சி ஒவ்வொரு விதத்தில் ஏற்பாடுகளை செஞ்சிக்கிட்டி ருக்காங்க. சென்னை ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 15-ந் தேதியே 65 ஜோடிகளுக்கு ஜெ. தலை மையில் திருமணம். செலவே 10 சி-யாம். முன்னாள் அமைச்சர் கண்ணப்பனோட மகன் திவாகர் உள்பட பல அ.தி.மு.க. புள்ளிகளின் வாரிசுகளோட கல்யாணம்ங் கிறதால செலவு தண்ணி பட்ட பாடாக இருக்குது. ஏற்கனவே கல்யாணம் ஆனவங்க மறு கல்யாணத்துக்கு வந்து விடாதபடி லிஸ்ட் கவனமா ரெடியாச்சாம்.''
""மற்ற ஊர்களில் எப்படி?''
""பிறந்தநாளையொட்டி 5 நாளைக்கு தீபாவளி மாதிரி பட்டாசு, வாணவேடிக்கைன்னு கொண்டாடித் தீர்த்திடணும்னு திட்டமாம். அதனால தென்மாவட்டங்களில் உள்ள பட்டாசு கம்பெனிகளில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தரப்பிலிருந்து செம ஆர்டராம். இலவசமா இவ்வளவு சப்ளை செய்யணுமான்னு பட்டாசு ஆலை அதிபர்களே அதிர்ந்து போயிருக்காங்களாம்.''
""பிறந்தநாளைன்னைக்கு கட்சிக்காரங்களெல்லாம் தங்கள் தலைமையைப் பார்க்கணும்னு விரும்புவாங்களே?''
""பல கணக்குகள் ஏற்கனவே போடப்பட்டிருக்கே.. இப்ப என்ன புதுக் கணக்காம்?''
""இந்திய அளவில் சிறுபான்மை சமுதாயத்தினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஓட்டுகளையும் அதுபோல தலித் சமுதாயத்தினரின் ஓட்டுகளையும் பா.ஜ.க. இன்றைக்கு வரைக்கும் வாங்க முடியாததாலதான் இழந்த ஆட்சியை அதனால திரும்பப் பிடிக்க முடியலைங்கிறது ஒரு புள்ளி விவரத்தின் மூலமா ஜெ. எடுத்திருக்கிற நிலைப்பாடாம். அதனால தமிழகத்தில் எம்.பி. தேர்தல் வரைக்கும் சிறுபான்மை சமுதாயத்தினருக்கும் தலித் மக்களுக்குமான பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கணும்னு முடிவெடுக்கப்பட்டு, அதி காரிகளுக்கும் உத்தரவுகள் போடப்பட்டி ருக்குதாம். வியாபாரம், தொழில், கல்விநிறுவனங்கள் இப்படி எதிலும் அவங்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாதுன்னு உத்தரவாம்.''
""அப்படின்னா இந்துக்கள் ஓட்டு களைக் கவர என்ன வழியாம்?''
""இந்துக்கள் ஓட்டுங்கிறது ஒருங்கிணைப்பா இல்லைன்னும், தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் அ.தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய வன்னியர், கவுண்டர், முக்குலத்து சமுதாயத்தினர் தங்கள் ஓட்டுகளை மாற்றிப் போடமாட்டாங்கன்னும் ஜெ. நம்புகிறாராம். தலித் மற்றும் சிறுபான்மை ஓட்டுகளைக் குறிவைத்து செயல்பட்டால் அதிக எம்.பி. சீட்டுகளைப் பிடிக்க முடியும்னு நம்பும் ஜெ., காங்கிரசோ பா.ஜ.க.வோ மத்தியில் ஆட்சியைப் பிடிக்காதுன்னு உறுதியா இருக்காராம். பா.ஜ.க.வின் ஒரே நம்பிக்கையான நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளரா நிறுத்துவதை நிதீஷ்குமார் கடுமையா எதிர்ப்பதால், எம்.பி. தேர்தலுக்குப்பிறகு பா.ஜ.க தரப்பின் ஆதரவு தனக்குத்தான் கிடைக்கும் என்பது ஜெ.வின் கணக்கு.''
""அதாவது, சிறுபான்மை வாக்குகளால் ஜெயித்து, பா.ஜ.க. வின் சப்போர்ட்டில் பிரதமர் கனவு, அப்படித்தானே? ஜெ.வின் கணக்கு இந்தளவுக்கு இருக்கும்போது, தி.மு.க. சைடில் என்னப்பா நடந்துக்கிட்டிருக்கு?''
""மதுரையைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஒருத்தர் பேசுனாருங்க தலைவரே.. எங்க ஏரியாவிலேதான் கட்சி நடவடிக்கைகள் அடாவடியா இருக்குன்னும், அழகிரியண்ணன் கூட இருக்கிறவங் களெல்லாம் ரவுடிகள்னும் சென்னையிலே இருக்கிற கட்சிக்காரங்க விமர்சிச்சாங்களே.. அங்கே என்ன நடக்குது? ஒரு பெண்ணோட வீட்டை அடிச்சி நொறுக்குறாங்க. பெண் குழந்தைகள் இருக்கிறப்பவே தாக்குறாங்களே.. அதெல்லாம் அகிம்சை செயல்பாடான்னு கேட்குறாரு.''
""நல்ல கேள்விதான்.. என்கிட்டேகூட தி.மு.க. பிரமுகர் ஒருவர், குஷ்புவோட பேட்டிக்காக கொந்தளிச்சவங்க, இது என்ன மடமான்னு அழகிரி கேட்டப்ப எங்கே போனாங்கன்னு கேட்டாருப்பா?''
""தி.மு.க.வில் உள்கட்சி விவகாரங்கள்தான் இன்னமும் ஓடிக் கிட்டிருக்கு. கட்சியின் பொதுச்செய லாளரான பேராசிரியருக்கு உடல் நிலை முடியலை. அவர் அறிவாலயத்திற்கும் வரலை. அவரை நேரில் சந்தித்து உடல்நலம் விசா ரிக்கணும்னு கலைஞர் நினைச்சாலும், கட்சிக்குள் குஷ்பு விவகாரம் ஓயாததால பயங்கர அப்செட்டாம். குஷ்பு தன்னோட பேட்டி பற்றி விளக்கம் கொடுத்தபிறகும் ஸ்டாலின் தரப்பு ரியாக்ஷன் காட்டியதில் கலைஞருக்கு ரொம்ப கோபமாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை களை கட்சி விஷயங்களில் முன்னி றுத்தக்கூடாதுங்கிறது கலைஞரோட நிலையாம்.''
""குஷ்பு எங்கேன்னு தி.மு.க. பிரமுகர்கள் தேடிக்கிட்டிருந் தாங்களே?''
""ம்''…
""தன் கோபத்தை கலைஞர் வெளிப்படுத்தினாராம். ஸ்டாலினும் தன் தரப்பு விஷயங்களை சொன்னாராம். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து வழக்கம்போல அறிவாலயத்திற்கு கலைஞர் வந்து, அடுத்தகட்ட பணிகளை கவனிக்கணும்ங்கிறதுதான் அறிவாலய வட்டாரத்தின் எதிர்பார்ப்பு. குஷ்புவும் கலைஞர் அறிவாலயம் வரும்போது சந்தித்துப் பேசணும்னு இருக்காராம்.''
""குஷ்பு வீட்டைத் தாக்கியவர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கைன்னு தலைமை அறிவித்ததே.. அப்படி ஏதாவது இருக்குமா?''
""நடவடிக்கை பற்றி தலைமை விசா ரித்துதானே முடிவெடுக்கும்னு சொல்லும் சிலர், இந்தப் பிரச்சினை பற்றிய இன்னொரு தகவலையும் சொல்றாங்க. குஷ்புவோட பேட்டி வெளியான அன்னைக்கு உதயநிதி ஸ்டாலினும் அன்பில் பொய்யாமொழி மகன் மகேஷும் டென்ஷனாகி, அதைப் பற்றி ஸ்டாலின் மனைவிகிட்டே சொல்ல, அவங் களும் டென்ஷனாகிட் டாங்களாம். டென்ஷ னோடு திருச்சி சிவா வீட்டுக் கல்யாணத் துக்குப் போனப்ப, அந்த மேடையில் குஷ்பு பேசுவ தற்கு, கலைஞர் அனுமதிச்சதும் ஸ்டாலின் மனைவி மேலும் டென்ஷனாகி மண்டபத்திலிருந்து வெளியேறிட்டாரு. இதை அறிந்ததும் உதய நிதியும் மகேஷும் டென்ஷனாயிட்டாங்களாம்.''
""ஓ''…
""அதுதானே அரசியல்.''…
""இப்படியெல்லாமா அரசியல் செய் வதுன்னு கம்யூனிஸ்ட் தோழர்களே அவங்களோட கட்சித் தலைமையின் நட வடிக்கைகளால் நொந்துபோயிருக்காங்க தலைவரே.. ஆளுநர் உரைக்கான சட்டமன்றக் கூட்டத்தொடரில் தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., காங்கிரஸ் கட்சிகளெல்லாம் ஆளுங்கட்சியை எதிர்த்து வெளிநடப்பு செய்தது. ஆனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் பெருசா எந்த எதிர்ப்பையும் காட்டலை. விவசாயி களின் நலன்களுக்கான கட்சின்னு பெயரெடுத்த இரு கட்சிகளும், காவிரி டெல்டா விவசாயிகளுக்கு வறட்சி நிவா ரணமா ஜெ. அரசு மிகக் குறைந்த தொகையை அறிவித்தபோதுகூட எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்னு இரண்டு கட்சிகளிலும் உள்ள விவசாய சங்கத் தோழர்கள் தங்கள் தலைமைகளைப் பார்த்துக் கேட்குறாங்க.''
""தலைமைகளின் பதில் என்னவாம்?''
""இதுவரைக்கும் வெள்ள நிவாரணம்தான் அரசாங்கம் கொடுத்திருக்கு. முதல் முறையா வறட்சி நிவாரணம் கொடுக்கும்போது அதில் நாம் அரசாங்கத்துக்கு சாதகமாத்தான் நடந்துக்கணும்னு தலைமைகள் சொல்லி யிருக்கு. தோழர்களோ, ஏக்கருக்கு 25 ஆயிரம் தருவதற்குப் பதிலா வெறும் 15 ஆயிரம்தான் அறிவிக்கப் பட்டிருக்கு. அதுவும் எல்லா விவ சாயிகளுக்கும் கிடையாது. விவ சாயிகளுக்கே இந்த நிலைமைன்னா நம்ம கட்சியின் அடித்தளமா இருக்கிற விவசாயத் தொழிலாளர் களோட நிலைமை என்னன்னு சி.பி.எம் தலைமையை நோக்கி கேள்விக்கணைகள் பாய்ந்து கொண்டிருக்குதாம்.''
""ஜெ.கிட்டே புதுக்கோட்டை அ.தி.மு.க பிரமுகர்கள் வாங்கிக் கட்டிக்கிட்டாங்களாமே?''
""அந்த விவரத்தை நான் சொல் றேன்.. ..விஸ்வரூபம் படத்திற்கு ஆதரவா அ.தி.மு.க. பிரமுகர் ஜாபர் அலி நிறைய பேனர்களை வைத்திருந்தார். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரசிகர் மன்றங்களின் அமைப்புக்கு அவர் தலைவரா இருக்காரு. அ.தி.மு.க. அரசு தடைவிதித்த விஸ்வரூபம் படத்துக்கு அதே கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் பேனர் வச்சது பற்றி கட்சிக்காரங் களும் இஸ்லாமிய அமைப்பினரும் மேலிடத்துக்குப் புகார் அனுப்பித் தள்ளிட்டாங்க. அதனால ஜாபர் அலியை கட்சியிலிருந்து நீக்கிட்டாரு ஜெ. அவர் மேலே ஏகப்பட்ட புகார்கள் வந்ததை பார்த்துட்டு மாவட்ட மந்திரி சுப்ரமணி யத்தையும் மா.செ. விஜயபாஸ்கரையும் பிடிச்சி, இந்தளவுக்கு புகார் வந்திருக்கு. நீங்க இரண்டு பேரும் எதுவும் சொல்ல லையேன்னு வறுத்து எடுத்துட்டாராம்.''