புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2013




          ""மதுரைல எந்த லாட்ஜுல, எத்தனாம் நம்பர் ரூம்ல, எத்தனை நாளு தங்கி இருந்து, பொட்டுவ எப்படி கொன்னாங்கன்னு  அத்தனையவும்  மொதமொதல்ல புட்டுப் புட்டு வச்சது நக்கீரன்தான். எந்த பத்திரிகையிலும் வெளிவராத விஜயபாண்டி, nakeranபிரபு போட்டோவ போட்டு இவங்களும் பொட்டு கொலைல சம்பந்தப்பட்டவங்கதான்னு கொலைகாரங்க முகத்த பளிச்சுன்னு அடையாளம் காட்டுனதும் நக்கீரன்தான். இனியும் தப்பிக்க முடியாதுன்னு நெனச்சோ என்னவோ, அந்த ரெண்டு பேரும் இன்னைக்கு  சேலம் கோர்ட்டுல சரண்டர் ஆயிட்டாங்க தெரியும்ல.''’’ 

காவல்துறையில் உள்ள அந்த உயர் அதிகாரி, புலனாய்வுச் செய்திகளை முன் கூட்டியே  வெளி யிடுவதில் தொடர்ந்து நக்கீரன் காட்டி வரும் வேகம் குறித்து  சிலாகித்துச் சொல்ல... ‘"எல்லாப் பெருமையும் வாசகர்களுக்கே'’என மனதுக்குள் தியானித்தவாறே, வெளிப் படையாகப் பாராட்டிய அவருக்கு ஒரு சல்யூட்’ வைத்தோம். 

இனி வழக்கு வேகம் பிடிக்குமா? 

போலீஸ் காவல் விசாரணையில் இந்தக் கொலையில் நேரடியாக ஈடுபட்ட ஏழு பேரில் சபாரத்தினமும் சந்தானமும் "தலை நகரத்துக்காக விஜயபாண்டி சொல்லித்தான் பொட்டுவை போட்டோம்'’என்று சொல்லியிருக்கிறார்கள். இப்போது சரணடைந்திருக்கும் விஜயபாண்டி தரும் வாக்குமூலம்தான் அவனை இயக்கியது யார்?’என்னும் முடிச்சை அவிழ்க்கும். 


காக்கிகள் வட்டாரமோ ""இந்த விஜயபாண்டி லேசுப்பட்ட ஆளு கிடையாது. அந்த அஞ்சு பேருகிட்ட "எந்தங்கச்சிய ஒருத்தன் டாவடிக்கிறான். சொசைட்டில அவன் பெரிய ஆளு. ஈஸியா சிக்கமாட்டான். அவன மெரட்டணும். ரெண்டு தட்டு தட்டணும்'னு சொல் லித்தான் தயார் பண்ணியிருக்கான். ப்ரொஃபஷனல் கில்லர்ஸ்ன்னா பொட்டு உடம்புல இத்தனை கொத்து கொத்தியிருப்பாங் களா? இவன் வாயில இருந்து  எந்த அளவுக்கு உண்மைகள் வெளிவருமோ?''’ என்று விஜய பாண்டியை விசாரணையில் எதிர்கொள்ள விருக்கும் எரிச்சலில் இருக்கிறது.  

இந்த வழக்கில் அரசியல்’ எதுவும் உண்டா? 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் கள் மற்றும் தேடப்படும் குற்றவாளிகள் தவிர, இளம் வி.வி.ஐ.பி. உள்ளிட்ட  13 தி.மு.க. புள்ளிகளின் பெயர் பட்டியலை வழக்கில் சேர்ப்பதற்கு அனுமதி கேட்டு காத்திருந்த மதுரை போலீஸ், மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலை வரான வி.கே.குருசாமி  போன்றவர்களை விசாரிக்கவும் செய்தது. ஏனென்றால்,  அழகிரி அணியில் இருந்த அட்டாக் பாண்டிக்கு, மு.க.ஸ்டாலினைச் சந்திப்பதற்கு  அப்பாயின் மெண்ட் வாங்கிக் கொடுத்தவர் வி.கே.குருசாமி தான். இதற்காக அப்போது சென்னை துர்கா பவனில் ரூம் போட்டுக் கொடுத்திருக்கிறார். அங்கு தங்கிய ஏழு நாட்களில் அட்டாக் செலவழித்தது ரூ.7 லட்சத்துக்கும் மேல் என ஹோட்டல் பில் சொல்கிறது. அந்த விடுதியின் வீடியோ கேமராவில்  வி.கே.குருசாமி வந்து போனது பதிவாகியிருக்கிறது. அட்டாக்கைத் தேடி சென்னை சென்ற காக்கிகள் கைப்பற்றி வந்த இந்த  ஆதாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு தான் சுப்பிரமணிய புரம் இன்ஸ்பெக்டர் பிரபு, குருசாமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது நாம் அங்கிருந்தோம். 

என்ன சொன்னார் குருசாமி? ""மதுரைக் காரரப் பத்தியோ, அவரு குடும்பத்துல உள்ளவங் கள பத்தியோ, அட்டாக்க பத்தியோ என்கிட்ட எதுவும் கேட்காதீங்க. கழுத்த அறுத்தாலும் சொல்ல மாட்டேன். ஏன்னா எனக்கும் இவங் களுக்கும் இப்ப எந்தத் தொடர்புமில்ல. கட்சிக்காரன்கிற முறைல, எனக்கு உறவுக்காரன்ங் கிற முறையில அட் டாக்க ஸ்டாலினைச் சந்திக்க அப்ப கூட் டிட்டுப் போனது வாஸ்தவம்தான். அதுக்கு பிறகு பெங்களூரு போறேன்னு சொல்லிட்டுப் போனான் அட்டாக். அவ்வளவுதான்'' என்றிருக்கிறார். 

27-ஆம் தேதி மதுரை -கோச்சடை ஏரியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பொட்டுவின் சொத்துக்கள் குறித்த பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.  ""ஏதோ நடக்கப் போகிறது..''’’ என்று தன் மனைவி மற்றும் நண்பர்களிடம் புலம்பி யிருக்கிறார் பொட்டு என்றெல்லாம் தங்களின் காதுக்கு வந்த ‘அரசியல்’ தகவல் களைக் காக்கிகள் கண்டு கொள்ளவில்லை. ஏனென் றால், “"பொட்டு கொலை வழக்கை அரசியலாக்கவே வேண்டாம். கொலையாளி கள் யாராக இருந்தாலும் சட்டப்படியான நட வடிக்கை மேற்கொள்ளுங் கள்'’என்று காக்கிகளுக்கு உத்தரவு வந்துள்ளதாம். பொட்டு சுரேஷால் அப்போது நேரடியாகவே பாதிக்கப்பட்ட நேர்மையான அந்தக் காவல் துறை  அதிகாரியும்  சென்னையி லிருந்தபடியே ""தி.மு.க.வுல இருக்கிற அசுரனுங்கன்னு மதுரை கூட்டத்தில் ஜெயலலிதா லிஸ்ட்ட வாசிச்சப்ப, இந்த ஆளயும் அசுரன்னு சொல்லிருக்காங்க. நம்ம டிபார்ட்மெண்ட்டயும் ரொம்ப மட்டமா நடத்துனாரு. அதுனால இந்தக் கேஸுல சம்பந்தப்பட்டவங்கள சாஃப்ட்டா விசாரிச்சா போதும். ஃபோர்ஸ் காட்ட வேணாம்'' என்று சொல்லி வைத்திருக்கிறாராம். 

அது சரி... அட்டாக் பாண்டி எங்கே?

மதுரையிலிருந்து 40-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளோடுதான் கிளம்பினானாம் அட்டாக். முதலில் அவனது மூன்று செல் நம்பர்களை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ட்ரேஸ் பண்ணியது போலீஸ். அத்தனையும் ஸ்விட்ச்-ஆப் நிலையில் இருக்கின்றன. 

இந்த நெருக்கடியான நிலையிலும் விஜயபாண்டி, பிரபு போன்றோரைச் சரணடையச் சொன்னது அட்டாக்தானாம். குறிப்பாக சேலத்தில் இவ்விருவரும் சரண்டர் ஆனது,  சேலம் சிறையில் ஏற்கனவே அடைபட்டிருக்கும்  சபாரத்தி னம் உள்ளிட்ட 7 பேரும் போலீஸ் காவல் விசாரணையின்போது என்னவெல்லாம் சொன்னார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்குத் தானாம். அதற்கேற்றார் போல்தான் இவ்விருவரின் வாக்குமூலமும் அமையுமாம்.  

அட்டாக் பாண்டியின் நிழலைக்கூட நெருங்க முடியாததால் கோலத்தைப் போட்டு விட்டு புள்ளி வைப்பது போல, பயணிக்கிறது  பொட்டு கொலை வழக்கு!

-நமது நிருபர்
படங்கள் : அண்ணல்

 இழந்தது பொட்டுவை மட்டுமா?

மு.க.அழகிரியை சென்னையிலிருந்து அழைத்து வந்து மதுரை - திருநகரில் உள்ள தன் வீட்டுக்கு அருகிலேயே குடியமர்த்தியவர் எக்ஸ். எம்.பி.அக்கினிராஜ். அன்றிலிருந்து அக்கினிராஜுக்கு ஏறுமுகம். மதுரை புறநகர் தி.மு.க. மா.செ. ஆனார். ராஜ்யசபா எம்.பி. ஆனார்.  அக்கினி ராஜுக்கு பிறகு அழகிரியை நெருங்கிய இட்லிக் கடை அண்ணாமலை ராயல் அண்ணாமலை ஆனார்.  இவருக்கு பிறகு அழகிரி பக்கம் வந்த ஏ.ஆர்.சந்திரன் புத்தகக் கடை வைத்து பெரும் தொழிலதிபரும் ஆனார். சிட்டிங் திருமங்கலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கமும் அழகிரியின் நிழலில் இளைப்பாறியவர்தான். அழகிரியின்  வீடியோ கடை பக்கத்தில் கடை வைத்திருந்த நாகேஷும் பெரும் பணக்காரர் ஆனார். அழகிரியின் செய்தி தொடர்பாளராக  இருந்த பாஸ்கரனும் பி.ஆர்.ஓ.வாக முன்னேறினார். தொடர்ந்து 20 வருடங்களாக அழகிரியின் பக்கத்தில் நீண்ட காலம் இருந்தவர் பாஸ்கரன் மட்டும்தான். பாஸ்கர னைக் கழற்றிவிட்டு, அந்த இடத்துக்கு வந்தவர் பொட்டு சுரேஷ். 2007-லிருந்து 2011 வரை அழகிரியின் நிழலாக ஒரு பவர் சென்டராகவே இருந்தது பொட்டு மட்டும்தான். அழகிரிக்கு அருகில் இருந்த  வேறு யாரும் பொட்டு அளவுக்கு வெறுப்பை சம்பாதிக்கவில்லை. இதுவே பகையாகி அவர் உயிரைப் பலி வாங்கிவிட்டது.  இப்போது பொட்டு சுரேஷையும் இழந்துவிட்டார் அழகிரி. ’’ 

-தி.மு.க. பெரிசு ஒன்றுதான் பொட்டுவோடு இத்தனை பேரையும் பட்டியலிட்டு நம்மிடம் உச் கொட்டியது.



 பொட்டுவின் கடைசி நிமிடங்கள்...

""பொட்டு சுரேஷின் செல்போனை ட்ரேஸ் செய்ததில், உயிர் பயம் மேலிட அவர் கடைசியாக 15 நிமிடங்கள் பேசியது முன்னாள் மதுரை ஐ.எஸ். ஏ.சி. ரஜினி குமரவேலுவிடம்தான்'' எனச் சொல்லும் காக்கிகள், ""பொட்டு கொலையானதில் அரசியல் ஏதும் இருக்கக்கூடும் என்ற யூகத்தின் அடிப்படையில் அனுப்பிய 13 பேர் பட்டியலில் எஸ்ஸார் கோபியின் பெயர் ஏனோ இல்லை'' என்கிறார்கள். ஆனால், அவரும் தலைமறைவாகிவிட்டார்.


 உயிர் பயத்தில் இன்னொரு குடும்பம்!

இன்னொரு குடும்பமும் உயிர் பயத்தில் உறைந்து போய் இருக்கிறது. அது தி.மு.க. மாநகர் மா.செ. தளபதியின் குடும்பம். "கலைஞர் அய்யாகிட்ட போயி கட்சி பொறுப்பு வேணாம்னு எழுதிக் கொடுத்துட்டு வாங்க' என்று தளபதியை சென்னைக்கு கிளம்ப வைத்தது குடும்பம். தலைமையோ, "பொறுப்பை மாற்றும் முடிவு கட்சிக்கு இல்லை, மதுரைக்கு போயி கட்சி வேலைய பாருய்யா...'’என்று ஆசுவாசப்படுத்தியிருக்கிறது. ஆனாலும், மதுரைக்கு திரும்ப மனமில்லாத மா.செ., குடும்ப நெருக்கடியால் மு.க.ஸ்டாலி னோடு துபாய்க்கு போய்விட்டு திரும்பி யிருக்கிறார். இன்னும் அந்தக் குடும்பம் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறது.

ad

ad