மழலைகளின் இதயத்தில் இடம்பிடித்த ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளன்று (நவ.14, 2012) ஆசிட் வீச்சால் சிதைக்கப்பட்டார் வினோதினி.
2012, டிசம்பர் 01-04 தேதியிட்ட நக்கீரனில் "ஆசிட் வீச்சு பயங்கரம்... அதிர்ச்சி ரிப்போர்ட்' என்ற தலைப்பில் வெளியான அட்டைப்பட செய்தியை பார்த்துவிட்டு ஏராளமானோர் நக்கீரன் அலுவலகத்தை தொடர்பு கொண்டு வினோதினியைக் காப்பாற்ற முடிந்தளவு உதவி செய்கிறோம் என்று முன்வந்தனர். அப்படியே செய்யவும் செய்தனர்.nakeran
ஆனாலும் கடந்த 87 நாட்களாக உயிருக்குப் போராடிய அவர் 12-02-2013 அன்று சென்னையில் பரிதாபமாக உயிரை விட்டார். லவ் பேர்ட்ஸ் வளர்ப்பில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த வினோதினியின் உடல் அடக்கமானது காதலர் தினத்துக்கு முந்தைய நாளான பிப்.13 அன்று.
ஆதித்யா மருத்துவமனையிலிருந்து அரசு கே.எம்.சி.க்கு கொண்டு செல்லப்பட்டது வினோதினியின் உடல்... அங்கும் அவருக்குப் போராட்டம் தான் காத்திருந்தது. உடற்கூறு ஆய்வு மருத்துவர்கள் செல்வகுமார், ஜிதேந்திரசிங் விரைவில் உடற்கூறு செய்து முடித்து உடலை ஒப்படைக்க காத் திருந்தும் இரவு 8 மணி வரை வர வில்லை காரைக்கால் போலீசார்.
மக்கள் கலை இலக்கிய கழகம், பெண்கள் விடுதலை முன்னணி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அமைப்பினர் சி.பி.எம்.மின் மாதர்சங்க தோழர்கள் உள்ளிட்ட மகளிர் அமைப்புகள் அஞ்சலி செலுத்தினர்.
மாதர் சங்க தோழர்களான சுகந்தி, வனஜா, மகாலட்சுமி, மரியா ஆகியோர் வினோதினியின் கொடூர மரணத்துக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொண்டனர். சுகந்தி கூறும்போது, ""2012-ல் மட்டும் இதுபோல் ஆசிட் வீச்சில் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதிக்கப்படக் காரணம் ஒருதலைக்காதல்தான். எவன்டி உன்னை பெத்தான், ஒய் திஸ் கொலவெறி போன்ற சமூக சீரழிவுக்கான சினிமா பாடல்களும் இந்த குற்றங்களை மறைமுகமாக ஊக்குவிக்கின்றன'' என்றார்.
டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி இயக்க மன்றத் தலைவர் சவுந்தர் முருகன்தான் வினோதினியின் பெற்றோரை சென்னைக்கே அழைத்து வந்து அவர்கள் வாழ்வதற்கான உதவிகளை செய்யும் முனைப்புடன் செய லாற்றி வருவதாக ஒரு தகவல் கிடைக்க... அவரிடம் கேட்டோம்.
""இச்சம்பவம் கொடூரத்தின் உச்சம். இத்தனை நாட்கள் வேதனையை அனுபவித்து துடித்து, துடித்து இறந்திருக்கிறாள் அந்தக் குழந்தை. இதற்கான தண்டனை அவனுக்கு வழங்கப்படுவதில் பாரபட்சமே இருக்கக்கூடாது'' என்று சொல்லி கண் கலங்கினார்.
கவிஞர் தாமரை, ம.தி.மு.க. மகளிரணி மாநில செயலாளர் அப்பல்லோ குமரி விஜயகுமாரி வினோதினிக்கு கண்ணீர் அஞ்சலி செய்துவிட்டு வந்தனர். கவிஞர் தாமரை, ""டெல்லி மாணவி விவகாரத்தில் பிரதமரும் ஜனாதி பதியும் களத்தில் இறங்குகிறார்கள். வினோதினிக்கு? ஆட்சியாளர்கள் பாரபட்சம் காட்டுவது எதனால் என்று எனக்குப் புரியவில்லை.
"எங்கிருந்தாலும் வாழ்க...' என்ற பாடல் ஒலித்த இதே மண்ணில்தான் தோற்ற காதலன் பாடுவதாக "அட்றா அவளை... வெட்றா அவளை' என்கிற பாடல்களும் வருகின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்காமல், ரசித்து இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடக்க நாமே காரணமாக இருந்திருக்கிறோம். சினிமா, ஊடகங்கள் என அனைத்து தரப்புமே இதற்கு பொறுப் பாளிகள். ஆங்கில ஊடகங்களுக்குள் உள்ள ஒரு ஒற்றுமை இங்கும் காணப்படுமானால் டெல்லி மாணவி விவகாரம் போல புனிதா, வினோதினி மரணங்கள் கொண்டு செல்லப் பட்டிருக்கும்'' என்று ஆவேசம் காட்டினார் தாமரை.
தேசிய பெண்கள் முன்னணியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் நமீஷா, கவிஞர் தஞ்சை த.சுமித்ரா, டாக்டர் சிவரஞ்சனி உள்ளிட்டோர் வினோதினியின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பதாகை களுடன் கோயம்பேடு நெடுஞ் சாலையில் கோஷங்கள் எழுப் பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நக்கீரன் மூலமாக வினோதினி மருத்துவத்துக்கு உதவிட முன்வந்த நெய்வேலி இளைஞர் ரெக்ஸ், வினோ தினியின் உடல் அடக்கம் சென் னையில் நடப்பதாக கிடைத்த தவறான தகவலையடுத்து சென் னைக்கு அவசர அவசரமாக வந்திருந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் விபரம் அறிந்தபின், அன்றே நாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றார். இப்படி ஒருவரல்ல பலர் வினோதினியைத் தேடிவந்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. சார்பில் கலைஞர் வினோதினி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் உதவி செய்து அறிவிப்பு
"எனக்குக் கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக்கூடாது' என்று ஆசிட் வீசிய சுரேஷ், வினோதினி இறந்துவிட்ட தகவலை கேட்டதும் தன் முகத்தில் ஓங்கி ஓங்கி அறைந்து கொண்டு கதறி யிருக்கிறான். "நா... தப்புப் பண்ணிட்டேம்மா... தப்புப் பண்ணிட்டேன்' என்று அழுது புரண்டவனின் குரலை கேட்க அங்கே ஒரு வரும் இல்லை. சுரேஷுக்கு ஆறுதல் சொல் வது போல அவன் முகத்தில் திராவகத்தால் சிதைந்த சதைப்பகுதிகள் விரலிடுக்குகளில் ஒட்டிக்கொண்டு நினைவுபடுத்தியது வினோதினியை.
வினோதினியின் தாய் சரஸ்வதி, ""அந்தப்பாவி சுரேஷுக்கு உரிய தண்டனையை கவர்ன்மெண்ட்டு வாங்கித் தரணும்... அந்தத் தண்டனை மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும்'' என்றார் நம்மிடம் பேசும்போது.
வினோதினியை சென்னை மருத்துவமனைகளில் சேர்த்து உடனிருந்து கடைசி வரை அவரை காப்பாற்றிட எல்லா வகையிலும் முயற்சித்தவர் தாய்மாமன் ரமேஷ், அவர் நம்மிடம், ""கண்டிப்பா நியாயம் கிடைக்கும்னு நம்ப