புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2013


இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்க இரா­ணுவச் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் இர­க­சி­ய­மாக ஆயு­தக்­கு­ழுவை நடத்­தி­ வ­ரு­­வ­தாகச் சந்­தே­கிக்­கின்றேன் என பிர­தான எதிர்கட்­சி­யான ஐக்­கி­ய­தே­சியக் கட்­சியின் தலை­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று யாழ்ப்­பா­ணத்தில் தெரி­வித்­தார்.
வலி.வ­டக்கு மக்கள் நடத்­திய உண்­ணா­வி­ரதப் போரா­ட்­டத்தில் இரா­ணு­வத்­தினர் நடந்­­துகொண்ட விதம் சிங்­க­ள மக்கள் உள்ளிட்ட முழு இலங்­கை­ய­ருக்­கும் அப­கீ­ர்த்­தியை
ஏற்­ப­டுத்தும் விடயம் என்­பதால் உட­­ன­­டி­யாக சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்­பா­ணத்­தி­லு­ள்ள விருந்­தினர் விடு­தி­யொன்றில் பொது எதி­ர­ணி­யி­­னர் ஏற்­பா­டு செய்த ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பி­ல் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே­யே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.
அங்கு அவர் உரை­யாற்­று­கை­யில்,
வடக்கில் எவரும் பயங்­­கரவாதத்தைத் தோற்­று­விக்கும் எண்­ணத்­துடன் செயற்­ப­டவில்லை. பிர­தேசத்தின் பாது­காப்பை மக்­களின் ஒத்­து­ழைப்­பின் ஊடாகவே பெற்­றுக்­கொள்­ள­மு­டி­யும். இதற்­காக மக்­களின் ஒத்­து­ழைப்­புக்­களை பெற்­றுக்­கொள்ள முன்­வ­ர­வேண்­டும்.

நேற்று முன்­தினம் நடை­பெற்ற உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் தேவையற்ற இடை­யூ­­றுகள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. நான் உரை­யாற்­றி­ய­பொ­ழுது ஊட­கங்­களைத் திட்­டு­வது போல் கூச்சல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் பொதுச் செய­லாளர் மாவை.சே­னா­தி­ராஜா அந்த இடத்­திற்குச் சென்று இடை­யூ­று செய்­த­வ­ரைத் தடுத்­ததை நான் பார்த்தேன்.
ராஜ­பக்­ஷ ஒழிக என மக்கள் கோஷ­மிட்­ட­போது சிலர் மக்­களை விரட்ட முயற்­சித்­தனர். நான் அந்த நிகழ்­­விற்­குச் சென்­ற­போது நிகழ்வு நடை­பெற்ற இடத்­திற்கு அண்­மையில் இரா­ணு­வத்­தி­ன­­ரு­­டைய 8865 லாண்­டோவர் ரக வாக­­னமும் நிறு­த்­த­­ப்­பட்­டி­ருந்­தது.
அதற்­க­ரு­கில் சீரு­டை தரித்த இரா­ணு­வ அதி­காரி நின்­ற­தையும் நான் கண்­டேன். அந்த அதி­கா­ரியைப் பார்த்து நான் சிரித்­த­போ­து அவ­­ரும் என்­னைப்­பார்த்து சிரித்தார்.
அங்­கி­ரு­ந்த இரா­­ணுவப் பிரி­வினர் கஜ­பாகு படைப்­பி­ரிவைச் சேர்ந்­த­­வர்கள் என எனக்குத் தகவல் கிடைத்­தது. கஜ­­பாகு படைப்­பி­ரி­ரின் 14 ஆவது படைப்­பி­ரி­வினரிட­­மி­ருந்து ஐக்­கிய தேசியக் கட்சியால் தக­வல்­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­மு­டியும். உண்­ணா­வி­ரதத்­திற்கு இடை­யூறு செய்­த­­வர்­களின் விப­ரங்­க­ளையும் தக­வல்­க­ளையும் எம்மால் பெறமுடியும்.
உண்­ணா­வி­ரத்தில் ஈடு­பட்­ட­வர்­க­ளை­யும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளையும் தாக்­கி­யது தொடர்­ட­பா­க­வு­ம் நாங்கள் கேள்­விப்­பட்­­டோம். இவ் விட­யத்தை ஐக்­கி­ய­­தே­சியக் கட்­சியின் இணை­யத்­தளம் உட்­பட சகல ஊட­­கங்­க­ளிலும் பிர­சு­ரிக்­கு­மாறு கூறி­யுள்­ளேன். அப்­பொ­ழு­துதான் உண்மை வெளிவரும். தாக்­குதல் நடத்­தியோரை பொலிஸார் தாமா­கவே முன்­­வந்து கைது­செய்­தி­ருக்­க­வேண்டும்.

 ஆனால் மக்கள் கைது­­செய்து ஒப்­ப­டைத்­த­வர் மீது கூட பொலிஸார் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. இச் சம்­ப­வங்கள் கட­ந்தகால கிறீஸ் மனிதனை ஞாப­கப்­ப­டுத்­­து­கின்­றன. யாழ்.மா­வ­ட்­டத்­திற்­குப் பொறு­ப்­பான இரா­ணு­வக்­ கட்­டளைத் தள­பதி மஹிந்த ஹத்­து­ரு­சிங்­க­வுக்­கு இவ் விட­யங்கள் தெரி­ந்­தி­ருக்­கும் என நான் நம்­பு­கின்­­றேன்.
உண்மையில் இரா­ணுவக்­ கட்­ட­ளைத் தள­­பதி மஹி­ந்த ஹத்­து­ரு­சிங்க இரா­ணுவச் செயற்­பா­டு­க­ளுக்கு அப்பால் இர­க­சி­ய­மாக ஆயு­தக்­கு­ழுவை நடத்­தி­ வ­ரு­­வ­தாகச் சந்­தே­கிக்­கின்றேன். இது தவ­றாயின் அவர் எழுத்­து­­மூலம் அறி­விக்­க­வேண்டும். இந்தச் செயல் இரா­ணு­வத்­திற்கும் சிங்­கள மக்­க­ளுக்கும் அப­கீ­ர்த்­தியை ஏற்­ப­டுத்தி தமி­ழ் மக்­க­ளு­டைய கட்­ட­மைப்­புடன் மோத­­வைக்கும் செய­ல் என்­ப­தால் உட­ன­டி­யைாக தடுக்­கப்­ப­ட­வேண்­டியதொன்­றா­கும்.
பிச்­சைக்­கா­ர­னின் காயம் போல் இத்­த­கைய செயல்­களைச் செய்து இந்த அர­சா­ங்கம் பிச்­சைக்­கா­ரன்போல் அர­சியல் செய்­­கி­றது. இவ்வாறு செயற்­ப­டாமல் அர­சியல் செய்ய எங்­­க­­ளுத் தெரியும். நாம் இது தொடர்­பாக இரா­ணுவத் தள­பதி ஜெகத் ஜெய­சூ­ரி­ய­விடம் இச் சம்­ப­வத்­திற்கும் இரா­ணுவத்­திற்கும் தொடர்­பில்­லையா என வினா­வ வி­ரும்­பு­கின்­றேன்.
இரா­ணுவப் புல­னாய்­வா­ளர்­களும் இது­தொ­டர்பில் விசாணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்க வேண்டும் என நான் கோரு­கின்றேன். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பினர் எனக்குத் தக­வல் தர­வி­ல்லை. நான் இத்­த­­வல்­களைக் கொழும்பில் இருந்தே பெற்­றுக்­கொண்­டேன் இவ்­வி­டயம் தொடர்­பாக நான் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்க­ளு­டன்­ சேர்ந்து சர்­வ­தேச ஜன­நா­ய­கத்­தி­டமும் எழுத்­து­மூலம் முறை­யி­ட­வு­ள்ளேன் என்­றார். 

ad

ad