புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 பிப்., 2013


சண்டேலீடர் செய்தியாளர் மீது துப்பாக்கிச்சூடு! உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு!

இலங்கையின் சண்டே லீடர் ஆங்கில பத்திரிகையின் செய்தியாளர் பாராஸ் சௌகாட்டலி (Faraz Shaukatally) வெள்ளிக்கிழமை நள்ளிரவில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.

இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது கழுத்தில் காயமடைந்த நிலையில் அவர் உடனடியாக களுபோவில வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவரது கழுத்தில் துப்பாக்கி சன்னங்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2ம் இணைப்பு
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீது துப்பாக்கிச் சூடு
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாரூக் சவுகத்தலி என்பவரின்  மீது இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
பாரூக்கின் வீட்டுக்குள் பிரவேசித்த மூன்று இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாரூக், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கழுத்துப் பகுதியில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும், உயிராபத்து எதுவும் கிடையாது என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டே லீடர் ஊடகவியலாளர் மீது துப்பாக்கி சூடு - உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஊடகவியலாளர் பரான் சவுகரலி மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தெஹிவளை மவுன்லெவனியா வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்றிரவு இரவு துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பரான் சவுகரலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
சண்டேலீடர் பத்திரிகை கடந்த காலங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துவந்த ஒரு புலனாய்வுச் செய்தி இதழ்.
புலனாய்வுச் செய்திகளை எழுதிவந்த சௌக்கத் அலி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று ஏற்கனவே தெரிவித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.
சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடந்த ஒரு தசாப்த காலத்தில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால் எந்தவொரு படுகொலை தொடர்பிலும் நீதி விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படவில்லை என்கின்ற விமர்சனங்கள் தொடர்ந்தும் இருந்த வண்ணம் உள்ளன.

ad

ad