தெல்லிப்பளை கல்விக்கோட்ட பாடசாலை அணிகளுக்கிடையே இடம்பெற்ற 17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி கோட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணியும் வயாவிளான் மத்திய கல்லூரி அணியும் மோதிக் கொண்டன.

இப் போட்டியில் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு யூனியன் கல்லூரி எதிர்ப்பு இல்லாமையால் ஆரம்பம் முதல் மைதானத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொண்டிருந்தது.

முதல் பாதி ஆட்டத்தில் ய+னியன் கல்லூரி 11:04 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றது. இரண்டாம் பாதி ஆட்டமும் யூனியன் கல்லூரிக்கு சாதகமாக அமைய ஆட்ட நிறைவில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி அணி 14:07 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று கோட்டச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
19 வயதுப் பிரிவு
இந்நிலையில், தெல்லிப்பளை கல்விக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையே நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் 19 வயதுப் பிரிவினருக்கான அணி கோட்டச் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
யூனியன் கல்லூரி வீராங்கனைகளையும் பயிற்றுவிப்பாளர் திருமதி ஜெ.ஜெயந்தியையும் படத்தில் காணலாம்.