ஜெனிவா அலுவலகத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ் இன அழிப்பிற்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் வகையில் இடம்பெறும் கவனயீர்ப்பு நிகழ்வில் இலங்கையிலிருந்து வருகை தந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பா.உக்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேத்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன், ஆகியோர் இலங்கையின் இன அழிப்பு, இனச்சுத்திகரிப்பை பிரதிபலிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டனர்.
இச் செயற்பாட்டை முன்னெடுத்து வரும் தமிழ் இன உணர்வாளன் திரு கஜன் அவர்களுடன் கருத்துப் பரிமாறலிலும் ஈடுபட்டனர்.
அவ் உணர்வாளன், யார் தமிழன் ஆண்டாலும் எம் உயிரை தியாகம் செய்ய நாம் தயார் என இந் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம், பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மண்ணில் இருந்து நாம் மக்களுடன் உள்ளோம். உங்கள் பலம் என்றும் எமக்கு தேவை. சர்வதேசம் எம்மைச் சூழ்ந்துள்ளது. என்றார்.