புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 மார்., 2013


2-வது டெஸ்ட் போட்டி; இந்தியா வெற்றி 
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. 


ஆஸ்திரேலியா 85 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 237 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி 154.1 ஓவர்களில் அனைத்து விகெட்களையும் இழந்து 503 ரன்கள் எடுத்தது.  
இதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய அணி 67 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 131 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ad

ad