புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மார்., 2013


அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வடகொரியா தயார்!

 வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின் இராணுவ உயர் பீடத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவத்தளங்களான குஹாம், ஹவாய் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு வடகொரியா தனது ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நாடு போர்க்கான தயார் நிலையில் உள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மற்றும் தென்கொரியா இணைந்து நடத்திவரும் கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளுக்கு வடகொரியா நீண்டநாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்நடவடிக்கைகளால் ஆதிரமடைந்த வடகொரியா தென்கொரியா மற்றும் அமெரிக்க மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுமென எச்சரித்திருந்தது.
எனினும் வடகொரியா இதுவரை பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய அணு ஆயுதம் ஒன்றினை தயாரிக்கும் வல்லமையினை கொண்டிருக்கவில்லை என புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும் அமெரிக்காவின் பிரதான நிலப்பகுதி வரை சென்றும் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் வடகொரியாவிடம் இல்லையெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
வடகொரியாவின் எச்சரிக்கை தொடர்பில் தாம் பெரிதாக அலட்டிக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள தென்கொரியா வழமைக்கு மாறான எந்நடவடிக்கையையும் தான் எல்லைப்பகுதியில் அவதானிக்கவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.
ஆனால் இராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கண்காணித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
வடகொரியாவின் இந் நடவடிக்கையினால் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இதேவேளை அமெரிக்க B-52 ரக குண்டு வீச்சு விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் வான்பரப்பினூடக பறந்தமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட வடகொரியா அமெரிக்கா போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்ததுடன் அதன் மீது தாக்குதல் நடத்தப்படுமெனவும் எச்சரித்திருந்தது.
எனினும் வடகொரியாவின் இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவந்துள்ளமையானது வழமை வெறும் நாடகமெனவும் கடந்த காலங்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டுள்ளதாகவும் ஒரு சாரார் தெரிவித்துள்ளனர்.

ad

ad