புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


தமிழக மாணவர்கள் உண்ணாவிரதம்: தங்கபாலு மீது கல்வீச்சு, செருப்படி: தங்கபாலு கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தமிழக மாணவர்கள் தி.மு. க., மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்க மறுத்து விட்டனர் .
இவர்கள் தி.மு.க, தரப்பில் வந்த டி . கே. எஸ். இளங்கோவனை பேச அனுமதிக்கவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் மீது செருப்பு மற்றும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் இங்கு பதட்டம் நிலவியது.

சென்னை கோயம்பேடு பஸ் தரிப்பு அருகே தமிழக கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், அங்கு வாழும் தமிழர்கள் சமஉரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று 3 வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்த போராட்டத்திற்கு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காலையில் தி.மு.க, தரப்பில் வந்த எம். பி., இளங்கோவன் வந்து பேச முற்பட்டார். ஆனால், மாணவர்கள் பேச வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் பேச முடியாமல் திரும்பி போனார்.
இதனையடுத்து மாலையில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மாஜி மத்திய அமைச்சருமான தங்கபாலு வந்தார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர் மீது கற்களும் செருப்பும் வீசப்பட்டது. இதனையடுத்து தங்கபாலுவும் திரும்பி சென்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, ‘’என்னை மாணவர்கள் அழைத்த காரணத்தினால்தான் நான் அங்கு வந்தேன். ஆனால் மாணவர்கள் உடன் இருந்த ஒரு கும்பல் என்னை எதிர்த்து கோஷம் எழுப்பியது. இதனைநான் வன்மையாக கண்டிக்கிறேன். என கூறியுள்ளார்.

ad

ad