புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 மார்., 2013


மாறு தடம் ஒரு மாற்றத்தின் தடம் - இயக்குனர் ரமணா : நட்சத்திரச் சந்திப்பு

thx 4tamilmedia
புலம்பெயர் ஈழத் தமிழ்மக்களின் இரு தலைமுறைகள், ஓரு தடத்தில் இணைந்து பயணிக்க உருவாகியுள்ளது 'மாறு தடம்' என்கிறார், அத்திரைப்படத்தின் இயக்குனர் கலைவளரி சக.ரமணா.

ரமணதாஸ் பல்வேறு கலைவடிவங்கள் மூலம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு கலைஞர். முறையான நடிப்புப் பயிற்சி பெற்றிருக்கும் இவர், அஜீத் நடித்த அசல் படம் உட்பட,  சில  தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்தும், வேறு சில படங்களின் தயாரிப்புப் பணிகளிலும் பங்கு கொண்டிருந்தவர்.
புலம் பெயர் திரைப்பட முயற்சிகள் பலவற்றிலும் முன்னின்று உழைத்தவர். சுவிற்சர்லாந்தில் முதன் முறையாகத் தயாரிக்கப்பட்ட ( 90 நிமிடங்கள்) நீளத் திரைப்படமான " பூப்பெய்த்தும் காலம் " திரைப்படத்தின் இயக்குனர். ரமணதாஸ் அவர்களை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக,  நட்சத்திரச் சந்திப்பில்  உரையாடிய போது, அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ' மாறு தடம் ' குறித்து விரிவாகப் பேசினார்.
கடந்த இரண்டரை வருடங்களாக சுவிஸிலும் யாழ்ப்பாணத்திலும் உருவாக்கப்பட்ட இந்த இரண்டரை மணிநேரத் திரைப்படம், 03.03.2013 சுவிற்சர்லாந்தின் ஐந்து மாநிலங்களின் மத்தியிலமைந்துள்ள ( Zürichstrasse 52, 4665 Oftringen) Kino Fun-Maxx அகன்ற திரையரங்கில் காலை 10.00 மணி, பகல் 1.00 மணி, மாலை 4.00 மணி என மூன்று காட்சிகள் திரையிடப்படுகின்றது. தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலும் இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளதாகவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 'மாறுதடம்' திரைப்படத்தில் தடம் பதித்துள்ள கலைஞர்கள்:  
சுவிஸ் கலைஞர்கள் : ரமணா, மீனாபிரகாஷ், அனுசாந், விதுசன், விஷ்ணி, கஜன், சாய்ராஜ், கீதா, சுகிர்தா, யசோ, முரளி, இந்துசன், தனுஜன், விஜயன், பாஸ்கர், அனுக்ஷன், சஞ்சி, நிசிதன், சிவசங்கரன், தயா, பாலகிருஷ்ணன், கிருஷ்ணா, சுகந்தி, ஓவியன், விவேதா, விவேகா, இனியன், ஸ்ரெபானி, சிமோனெ, மச்சி பாலா, ரஞ்சினி, சுந்தரம், தர்சிகா,சுவேரா, நிவேதா, சுருதிகா, சிந்துயா, லக்ஷன், ரவி, அருண், பிரா, அஜித், கௌசி, லோகதாசன்.


இலங்கை யாழ்ப்பாண கலைஞர்கள் : பெர்மினஸ், கொலின் (திருமறைக் கலா மன்றம்), மனோரஞ்சினி, வி.ரி. அரசு, நிந்துஜா, அன்றூ, ஜசீதரன், கலைதாசன், துர்க்கா, மதுஷா, யுகன், பவிசரணி, கோபிதர்சன், தரிசனன்.

பாரிஸ் கலைஞர் : ஏ. ரகுநாதன், மற்றும் பலர்

இசை : வா. யதுர்சன் (சுவிஸ்), மு. உதயன் (சுவிஸ்)

ஒளித்தொகுப்பு : கிருபா (சுவிஸ்), யசீதரன் (யாழ்ப்பாணம்)

பிரத்தியேக சத்தம் : டனா (நித்தி விஷன் யாழ்ப்பாணம்)

டி.ரி.எஸ் (D.T.S.) : ஸ்டார் ஸ்டுடியோ (சாலிகிராமம் சென்னை)

கிராபிக்ஸ் & டிசைன் : விஜிதன் சொக்கா (பாரிஸ்), ராகவன் (கோடம்பாக்கம் சென்னை)

வண்ணக்கலவை : பிக்ஷல் ஷேக் (கோடம்பாக்கம் சென்னை)

ஒப்பனை : தயா லோகதாசன் (சுவிஸ்), அன்றூ (யாழ்ப்பாணம்)

இணைக் கதை : பாலகிருஷ்ணன்

ஒளிதொகுப்புத் தயாரிப்பு : விஷ்னி சினி ஆர்ட்ஸ்

தயாரிப்பு : ஓசை பிலிம்ஸ்


கதை,எழுத்து, படத்தொகுப்பு,பாடல்கள், ஆக்கம்

கலைவளரி சக. ரமணா (ரமணதாஸ்)

உங்கள் கருத்து இங்கே

SHOWING 0 COMMENTS

    ADD NEW COMMENT

    ad

    ad