புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2013


நடுக்கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகள் 120 கைது! பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை நடுக்கடலில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் இருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் 120 பேர் படகில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்றனர்.
நாகப்பட்டினம் அருகே சர்வதேச கடல் எல்லையில் சென்றபோது அவர்கள் பயணம் செய்த படகு பழுதானதால், நடுக்கடலில் தத்தளித்தனர்.
இது குறித்து செய்தி அறிந்த இந்தியக் கடலோர காவல் படையினர், அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கடலோர காவல் படையினர், சட்டவிரோத பயணிகள் அனைவரையும், சர்வதேச கடல் எல்லையில் மீட்டு, தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2ம் இணைப்பு
பிரதமருடன் வைகோ தொலைபேசியில் பேச்சு!
கடலில் தத்தளித்த 120 இலங்கை தமிழர்களை மீட்க கோரியும், துபையில் உள்ள 19 ஈழத்தமிழர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படாமல் தடுக்க கோரியும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
இது தொடர்பாக மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுடன், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை11.30 மணி அளவில், தொலைபேசியில் பேசினார்.
தனிப்பட்ட முறையில் நான் உங்கள் மீது மிகவும் மதிப்பும், மரியாதையும் வைத்து இருக்கின்றேன். ஆனால், அண்மைக்காலமாக உங்களை நான் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறேன்.
ஆயினும், நான் பேச முனைந்த போது, உடனே நீங்கள் பேச முன்வந்ததற்கு நன்றி. தமிழ்நாட்டைச் சேர்ந்த அங்கயற்கண்ணி என்ற ஒரு தமிழ்ப் பெண்ணை, சிங்கள இராணும் கைது செய்த போது, உங்களிடம் கோரிக்கை வைத்தேன். அவர் பாதுகாப்பாகத் திரும்ப ஏற்பாடு செய்தீர்கள்.
இப்போது, துபாயில் உள்ள 19 ஈழத்தமிழர்கள் கொழும்புக்கு அனுப்பப்பட்டால் கடுமையாகச் சித்ரவதை செய்யப்படுவார்கள். ஏற்கனவே, இசைப்பிரியா என்ற தமிழ்ப்பெண், சிங்கள இராணுவத்தால் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள், சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது, தமிழ் மக்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது.
அதேபோன்றதொரு கொடூரம் இப்போது துபாயில் உள்ள ஹரிணி என்ற பெண்ணுக்கும் மற்றவர்களுக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக உங்களை வேண்டுகிறேன்.
அவர்களை எக்காரணம் கொண்டும் கொழும்புக்கு அனுப்ப விடாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று வைகோ கேட்டுக்கொண்டார்.‘நான் வெளிவிவகாரத்துறை மூலம் இதுகுறித்துக் கவனிக்கிறேன்’ என்றார் பிரதமர்.
அடுத்து, இன்று காலையில், தமிழ்நாட்டின் வேளாங்கண்ணியில் இருந்து சென்ற, 120 ஈழத்தமிழர்கள் பயணித்த படகு மூழ்கும் நிலையில் உள்ளது. அவர்களைக் காப்பாற்றுங்கள் என்று வைகோ கேட்டுக் கொண்டார். தாம் உடனே கவனிப்பதாக, பிரதமர் உறுதி அளித்தார்" என்று கூறப்பட்டுள்ளது.
கடலில் தத்தளித்த ஈழத்தமிழ் அகதிகளை மீட்ட இந்திய அரசுக்கு திருமாவளவன் நன்றி தெரிவிப்பு

ad

ad