புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஏப்., 2013



இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப கூடாது என ஐக்கிய அரபு இராச்சியத்திடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
19 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை ஐக்கிய அரபு இராச்சியம் திருப்பி அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படக் கூடுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த 19 இலங்கையர்களையும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர்கள் என அங்கீகரித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய அதிகாரிகள் குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்வரும் 11ம் திகதி குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர் என அறியப்படுகிறது.
இலங்கையில் தமிழர்கள் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதாகவும், இதனால் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவது ஆபத்தாக அமையக் கூடும் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
குறித்த 11 பேர் உள்ளிட்ட 46 புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் பயணித்துள்ளதாகவும், படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக பயணம் இடைநடுவில் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பயணம் தடைப்பட்டவர்கள் டுபாயில் அடைக்கலம் கோரியதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த 46 பேரில், 39 பேரை புகலிடக் கோரிக்கையாளர்களாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் அங்கீகரித்துள்ளது.

ad

ad