புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஏப்., 2013


சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுத்த 2 டன் மாம்பழங்கள் பறிமுதல்
கோயம்பேடு பழ மார்க்கெட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


தமிழகத்தில் மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாம்பழங்கள் சென்னை கோயம்பேடு பழ சந்தைக்கு வருகின்றன. மாம்பழங்களை விரையில் பழுக்கவைக்க கார்பனைடு கற்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று புகார்கள் பல ஆண்டுகளாக உள்ளன.
இந்த நிலையில் கோயம்பேடு பழச் சந்தைக்கு திடீரென புதன்கிழமை சென்ற உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இது குறித்து உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:-
சென்னையில் கார்பனைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற புகார்கள் வந்தன. இதனையடுத்து உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் லட்சுமி நாராயணன் தலைமையில் 10 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கோயம்பேடு பழச் சந்தையில் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் கார்பனைடு கற்களால் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் சுமார் 200 கிலோ பப்பாளி பழங்களும் அடங்கும். மேலும் இந்த சோதனையில் சுமார் 100 முதல் 150 கிலோ வரையில் கார்பனைடு கற்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பழங்கள் மற்றும் கார்பனைடு கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. பின்னர் பழ வியாபாரிகளுக்கு கார்பனைடு கற்களால் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. கார்பனைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ad

ad