புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2013


சுரேஷ் எம்பியிடம் இரண்டு மணி நேரம் கடும் விசாரணை! (2ஆம் இணைப்பு)

இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது கருத்துக்களை தெரிவித்தால் விசாரணைகளுக்கு உட்படும் நிலைமையே ஏற்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் இன்று காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கொழும்பு 4ஆம் மாடியில் புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இந்தியாவிலிருந்து வெளியாகும் அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியிருந்த செவ்வி ஒன்று தொடர்பிலேயே குறித்த விசாரணைகள் இடம்பெற்றன. அந்த செவ்வியில் நாட்டின் பாதுகாப்பிற்கும் இராணுவத்தின் இரகசியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்தாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.
குறித்த விசாரணைக்கு வருமாறு எனக்கு 12ஆம் திகதி கடிதம் அனுப்பப்பட்டது, எனினும் நான் இன்றே விசாரணைக்குச் சென்றிருந்தேன்.
யாழ்ப்பாணம் இராணுவ மயமாக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கடமையில் உள்ளனர் என நான் அந்த செவ்வியில் தெரிவித்திருந்த விடயங்கள் ஏற்கனவே பல ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியாகி இருந்தன. இருப்பினும் இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தும் வகையில் நான் கருத்து தெரிவித்திருந்ததாக கூறி இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.  ஆனால் நான் அவ்வாறு எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கை இராணுவம் தொடர்பில் நாம் ஏதாவது 

ad

ad