புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2013


ஜெயலலிதாவை எச்சரிக்கை செய்த மத்திய அரசு. ஈழப்பிரச்சனையின் நிலை குறித்து அதிருப்தி.


ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் மத்திய அரசுக்குக் கடுமையான சினத்தை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் பரவிக்​கிடக்கிறது. அதற்கு அடிப்படையான சில விஷயங்களை டெல்லியில் இருந்து பட்டியல் போடுகிறார்கள்.''



''இலங்கைப் பிரச்னையில் ஜெயலலிதாவின் நிலைப்பாடுகள் மத்திய அரசுக்கு உகந்ததாக இல்லை. 'அரசியல்ரீதியாக என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், சட்டமன்றத்தில் தீர்மானமாகக் கொண்டுவர வேண்டுமா? ஒரு மாநிலச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிப்பதாக அமையக் கூடாது’ என்று, இலங்கை சம்பந்தமான தீர்மானம் பற்றி மத்திய அரசு நினைக்கிறது. 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். இலங்கையை நட்பு நாடு என்று சொல்லக் கூடாது’ என்று, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கக் கூடாது என்றும் நினைக்கின்றனர். 'எந்த விஷயத்துக்காக நெடுமாறன், வைகோ போன்றவர்களை ஜெயலலிதா கைதுசெய்தாரோ... அதேமாதிரியான செயல்பாடுகளை அவரே செய்ய​லாமா?’ என்பது அவர்​களின் கேள்வி. முதல் விஷயம் இது.

இரண்டாவது, கூடங்குளம் அணு உலை விவகாரம் இரண்டு ஆண்டுகளாக இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா ஒத்துழைப்புக் கொடுத்தால், உடனடியாகத் திறக்கலாம். ஆனால், போராட்டக்காரர்களை சரியாக ஒடுக்காமல் அவர் சுணக்கம் காட்டுவதால்தான், அணு உலையைத் திறக்க முடியவில்லை. 'அணு உலை விஷயத்தில் அதற்கு எதிராக முடிவெடுப்பது, தொழில் தொடங்க வருபவர்களுக்கும் அயல்நாடுகளுக்கும் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, கூடங்குளத்தை முதல்வர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது மத்திய அரசின் இரண்டாவது கட்டளை.''


''டெல்லியில் முதலமைச்சர்கள் மாநாடு கடந்த 15-ம் தேதி நடந்தது. ஜெயலலிதா செல்லவில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர் முனுசாமி போயிருந்தார். அதில் முதல்வரின் பேச்சு வாசிக்கப்பட்டது. மத்திய அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளைக் கடுமையாக எதிர்க்கும் வாசகங்கள் அதில் இடம்பெற்று இருந்தன. மாநிலத்தின் அதிகாரத்தைக் குறைக்கும் காரியத்தை மத்திய அரசு செய்துவருவதை அதில் கண்டித்தார் ஜெயலலிதா. இது மூன்றாவது.

தீவிரவாதிகள் சிலருக்குத் தமிழகமும் கேரளாவும் தளம் அமைத்துக் கொடுத்துள்ளதாம். பல்வேறு மாநிலங்​களுக்கு இங்கிருந்து செல்கிறார்க​ளாம். பலரும் அங்கிருந்து இங்கு வந்து பதுங்குகிறார்களாம். இதைத் தடுக்கும் காரியத்தை மாநில போலீஸார் சரியாகப் பார்க்கவில்லை என்பதும் மத்திய அரசாங்கத்தின் வருத்தம். இப்படிப் பல்வேறு கோபதாபங்களைக்கொண்டு எச்சரிக்கும் தொனியில் டெல்லியில் இருந்து தாக்கீது வந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. 'ஈழப் பிரச்னை மற்றும் கூடங்குளம் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடுகளையே வழிமொழிய வேண்டும்’ என்ற அர்த்தத்தில் இது சம்பந்தமாகப் பேசியவர்கள் சொல்கிறார்களாம்.''


''டெல்லி அதிகாரி ஒருவர் சென்னைக்கு வந்து இந்தத் தகவலை சொன்னதாகக் கூறுகிறார்கள். அதேபோல, தமிழக உயர் அதிகாரி ஒருவருக்கு டெல்லியில் இருந்து வந்த போன் கால் இவற்றைச் சொன்னதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்​பட்டது என்பதால், இதை சீரியஸாகப் பார்க்கிறார்களாம். மொத்தத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்குமான மோதல் தொடர்கிறது'' 

ad

ad