5 அணிகள் மோதும் ஆசிய ரக்பி போட்டி; முதல் போட்டியில் இலங்கை வெற்றி
சீன தைபே அணியை இலங்கை அணி 39-08 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டது. ஹவலொக் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கை அணி முதற்பாதியில் 06-03 என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும், இரண்டாம் பாதியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 39-08 என்ற புள்ளிகளால் வெற்றிபெற்றது.
இத் தொடரின் முதலாவது போட்டியில் தாய்லாந்து அணி கஸகஸ்தான் அணியை 33-10 என்ற புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி கொண்டிருந்தது. இப்போட்டிகளில் இலங்கை, சீன தைபே, கஸகஸ்தான், தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்குபற்றுகின்றமை குறிப்பிடத் தக்கது.