21 ஏப்., 2013கலைஞர் - விஜயகாந்த் திடீர் சந்திப்பு


தி.மு.க., தலைவர் கலைஞரும், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, பரஸ்பரம் நலம் விசாரித்தும் கொண்டனர்.


"தினத்தந்தி' நாளிதழ் அதிபர், சிவந்தி ஆதித்தனின் மறைவுக்கு, அஞ்சலி செலுத்த சென்றபோது, சென்னை போயஸ் தோட்டத்தில் இந்த சந்திப்பு, 20,04,2013 சனிக்கிழமை காலை நடந்தது. அஞ்சலி செலுத்திவிட்டு, விஜயகாந்த் வெளியில் கொண்டிருந்தபோது, எதிரே, காரில் கலைஞர் வந்தார். இருவரும், நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர். காரிலிருந்த, கலைஞருக்கு, விஜயகாந்த் வணக்கம் செலுத்த, கலைஞரும் பதில் வணக்கம் செலுத்தினார். அப்போது, தி.மு.க., துணை பொதுச் செயலர் துரைமுருகன் உடனிருந்தார். அண்மை காலத்தில், இரு தலைவர்களும் நேருக்கு, நேர் சந்திப்பது இதுவே முதல்முறை